Reliance Jio: டெலிகாம் சந்தையில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் முகேஷ் அம்பானி, தற்போது வெறும் 91 ரூபாயில் பல நன்மைகளை அளிக்கும் திட்டத்தை வழங்குகிறார். பிரபல தொழிலதிபரும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் மிகவும் பிரபலமானது. ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக, ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது.
ஜியோவைப் போலவே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் கட்டணத் திட்டங்களின் விகிதங்களை உயர்த்திய நிலையில் விலை உயர்வுக்குப் பிறகும், முகேஷ் அம்பானி ஜியோ பயனர்களுக்கு மலிவான ஒரு திட்டத்தை வழங்குகிறார். குறைந்த பணத்தில் நல்ல சேவையை வழங்கும் திட்டத்தின் பலன்களை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.91 திட்டம்
ஜியோ அதன் பயனர்களுக்கு பல்வேறு விலை வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஜியோவின் போர்ட்ஃபோலியோவை கவனமாகப் பார்த்தால், வெறும் 91 ரூபாய்க்கு வரும் ஒரு திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் திட்டம் குறைந்த விலையில் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் 91 ரூபாய் திட்டம், பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் எவ்வளவு வேண்டுமானாலும் அழைப்புகளை செய்யலாம்.
ஜியோ 91 ரூபாய் திட்டம் நன்மைகள்
ஜியோவின் இந்தத் திட்டத்தின் கீழ், மொத்தம் 3 ஜிபியைப் கிடைக்கும், இதில் தினசரி 100 எம்பி டேட்டாவும், கூடுதலாக 200 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் மொத்தம் 50 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உண்டு. ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவும் கிடைக்கும்.
இந்த திட்டம் ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ போனைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற திட்டம் இது. ஜியோவின் இணையதளம், My Jio ஆப் அல்லது பிற UPI ஆப்ஸ் மூலம் இந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.