‘தீபாவளி’ என்று சொன்னதும் சட்டென்று நியாபகத்திற்கு வருவது…ஒன்று ‘பட்டாசு’, இன்னொன்று ‘புது டிரஸ்’.
‘டிரஸ்’ என்றாலே பெண்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதுவும் ‘தீபாவளிக்கு’ என்று சொன்னால் கேட்கவா வேண்டும்? தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இப்போது பலரும் ஷாப்பிங் மோடுக்குள் சென்றிருப்பார்கள். இன்னும் அப்படி செல்லாத பெண்களுக்கு, இந்த ஆண்டு தீபாவளி புதுவரவுகளின் கைட் இதோ…
* 100 சதவிகிதம் பட்டாலே ஆன பட்டு சேலை லிட்சி சேலை (Litchie Saree). இந்த சேலைக்கு மிக்ஸ் மேட்ச் பிளவுஸோடு டிரெடிஷனல் நகை போட்டால் டாப் டக்கராக இருக்கும்.
* கிரெடியண்ட் லுக் உள்ள சேலை ‘ஓம்ப்ரே சேலை’ (Ombre Saree). அடர் கலரில் பார்டர் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதன் அடர்த்தி குறைந்து லைட் கலரில் வந்து முடிவது இந்த சேலையின் ஹைலைட். இந்த சேலை மாடர்ன் நகைகள் அணிந்தால் அள்ளும்.
* பார்டர் ஒரு மாதிரியும், சேலையின் மையப் பகுதி வேறு நிறம், வேறு ஸ்டைலில் இருப்பது கோர்வை (Korvai Silk) சேலையின் ஸ்பெஷல். இதற்கு ‘கல கல’ என்று கண்ணாடி வளையல் போட்டு டிரெடிஷனல் நகைகள் அணித்தால் ‘ப்ப்ப்பா’ மொமண்ட் தான்.
* ‘பழசு இல்ல ராஜா’ புதுசு என்பது போல டிசைனர் சேலைகளுக்கு இப்போது டிரெண்டில் இருக்கிறது. இதற்கு மாடர்ன் லுக் பக்கா மேட்ச்.
* மிஸ்டர் அண்ட் மிஸஸ் கப்பிள் காம்போ, இன்றைய கப்பிள்களின் ஃபேவரைட் உடை. பெண்களின் புடவை நிறத்திலேயே ஆண்களின் சட்டை மற்றும் வேட்டி. கூலிங் கிளாஸுடன் அணிந்து, ‘மனசிலாயோ’வுக்கு ஒரு ரீல்ஸ் செய்தால், ‘சும்மா கிழி’யாக இருக்கும்.
இண்டோ – வெஸ்டர்ன் கலெக்ஷன்
* ‘பூவ பூவ பூவே’ பாடல் மாதிரி குர்தா எங்கும் பூக்கள் டிசைன் குவிந்து கிடக்கிறது ‘ட்வாரா ஃப்ளோரல் குர்தா’வில். இந்த குர்தாவுக்கு ஆங்கிள் ஃபிட் லெக்கிங் அல்லது குர்தா பேண்ட் – இரண்டுமே பெர்ஃபெக்ட் ஃபிட்.
* கடந்த தீபாவளியில் அறிமுகமாகியிருந்தாலும், இப்போதும் டிரெண்டில் இருக்கிறது ஆலியா கட் குர்தா. இதற்கு குர்தா பேண்ட் கூடுதல் அழகு சேர்க்கும்.
* அப்போதும்… இப்போதும்… எப்போதும் பெண்களின் சாய்ஸ் அனர்கலி. இதை லெகின்ஸ் போட்டு டிரெடிஷனல் லுக்கும் கொண்டு வரலாம். எத்னிக் பலாசோ அணிந்து மாடர்ன் லுக்கும் கொண்டு வரலாம். இரண்டுமே டக்கராக இருக்கும்.
* ஷார்ட் அனர்கலி டாப்ஸும், எக்ஸ்டெண்டெட் பலாசோவும் ஷாராரா செட். இது ஒரு எத்னிக் – வெஸ்டர்ன் டிரஸ். இதற்கு ஒரு பெரிய கம்மல் போட்டு… பிளாக் மெட்டல் வளையல்கள் போட்டால் கிளாஸிக் லுக்காக அமையும்.
* பிளைன் டாப்ஸ் மேல் ஜாக்கெட் ஸ்டைல் லாங் குர்தா போட்டு கிளாஸ் + மாஸ் தான்.
இந்தியன் ஸ்டைல் சைனீஸ் பெண்கள் உடையை யோசித்து பாருங்களேன். அதுதான் கஃப்தான். இது பார்டிகளுக்கு செம்ம அவுட் ஃபிட்டாக இருக்கும்.
பாட்டம்களில் பிரிஸ்டைன் பட்டியாலா, ஸ்கிர்ட் கம் பலாசோ சூட், பேகி பேண்ட் எல்லாம் இப்போதைய புது டிரெண்ட்.
இன்னும் பட்டியல் நீண்…..டுக்கொண்டே போகும். ஆனால், இவைதான் டாப் செலெக்ஷன்கள். சின்ன சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கைக்கு பெரிய சந்தோஷங்களைத் தருகிறது. அழகு சேர்கின்ற ஆடைகளும் அப்படித்தான். இந்த வருஷ கலெக்ஷனோட தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுங்கள்!