அடுத்த மாதம் பிரமாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது `கங்குவா’.
சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதுதான் திஷா பதானி மற்றும் பாபி தியோலின் தமிழ் டெபுட்! அதிகப்படியான பொருள்செலவில் பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது கங்குவா. இத்திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கி இத்திரைப்படம் குறித்தான விமர்சனத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
மதன் கார்க்கி, “கங்குவா திரைப்படத்தின் முழுபதிப்பை இன்று பார்த்தேன். டப்பிங் சமயத்தில் ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காட்சிகளின் பிரமாண்டம், கலையின் நுணுக்கம், கதையின் ஆழம், இசையின் கம்பீரம் என அனைத்தும் சூர்யா சாரின் பவர்ஹவுஸ் பெர்பாமென்ஸுடன் இணைந்திருக்கிறது.
இதுபோன்ற அற்புதமான அனுபவத்தை கொடுக்கும் திரைப்படத்தை எடுத்த சிவா சாருக்கும், கனவுகளை நனவாக்கிய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…