Diploma, Degree படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் Konkan Railway-ல் உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
இது குறித்த விவரங்கள்…
பயிற்சி அளிக்கப்படும் பாடப்பிரிவுகள் வாரியாக காலியிட விவரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடப்பிரிவுகள் வாரியாக காலியிட விவரங்கள்

பிரிவு வாரியாக பயிற்சி இடங்கள்

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice (Engineering)
காலியிடங்கள்: 80
கல்வித்தகுதி : பயிற்சிவழங் கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் B.E. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Technician Apprentice (Engineering)
காலியிடங்கள்: 80
கல்வித்தகுதி : பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் Diploma Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர் : Graduate Apprentice (Non-Engineering)
காலியிடங்கள்: 20
கல்வித்தகுதி: கலை/அறிவியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணபிக்க தகுதி: மேற்கண்ட பாடப்பிரிவுகளில் 2020-ம் கல்வி ஆண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டப்படிப்பு / டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித்தொகை:
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 உதவித்தொகை வழங்கப்படும்.
டிப்ளமோ என்ஜினியர்களுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு:
01.09.2024 தேதியின்படி 18 வயது முதல் 25-வயதுக்குள் இருக்க வேண்டும். (DOB 01.09.1999 முதல் 01.09.2006 வரை).
SC / ST / OBC பிரிவினர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு. SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC-NCL விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் அதிகபட்ச வயது தளர்வு இருக்கும்.
ஆவணச் சரிபார்ப்பின் போது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள் தங்களுடைய விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Establishment Name List-ஐ கிளிக் செய்து, Konkan Railway-தேர்வு செய்ய வேண்டும், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-11-2024
மேலும் விவரங்களுக்கு Notification No.: CO/APPR/ 2024/01 லிங்கை கிளிக் செய்து முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட: www.konkanrailway.com