ஐபிஎல்லில் புதிய ட்விஸ்ட்! ஆர்சிபி அணிக்காக விளையாடப்போகும் ரிஷப் பந்த்?

Rishabh Pant: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2025 மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியிலும் உள்ள சில முக்கியமான வீரர்கள் வேறு அணிக்கு மாற உள்ளனர் என்று ஆரம்பத்தில் இருந்தே தகவல் வெளியாகி வருகிறது. கேஎல் ராகுல் லக்னோ அணியில் இருந்து விலகி ஆர்சிபிக்காக விளையாட உள்ளார் என்றும், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெல்லிக்கு வர உள்ளார் என்றும், ரிஷப் பந்த் சென்னை அணிக்கு வர உள்ளார் என்றும் கூறப்படுகிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமைக்கும் பந்திற்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பந்த் ஏலத்திற்கு வந்தால் அவரை தங்கள் அணியில் எடுக்க விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிக முயற்சி செய்து வருகிறது.

வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் எந்த எந்த வீரரை தக்க வைக்க போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பந்த் X தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் ஏலத்திற்கு வந்தால் எவ்வளவு தொகைக்கு போவேன் என்று பதிவிட்டு இருந்தார். சிலர் விளையாட்டிற்காக பந்த் இப்படி போட்டு இருக்கலாம் என்று கூறினார்கள், ஆனால் அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பந்த் நிச்சயம் இருப்பார் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்தார் தினேஷ் கார்த்திக். அவர் கடந்த ஆண்டுடன் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு ஒரு விக்கெட் கீப்பிங் பேட்டர் தேவைப்படுகிறது.

RISHABH PANT IS ON THE RADAR OF RCB…!!!!

– RCB are keeping very close eyes on him. (TOI). pic.twitter.com/vjzzE7iXFU

— Tanuj Singh (@ImTanujSingh) October 23, 2024

கடந்த 2022 டிசம்பர் மாதம் மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கினார் பந்த். அதனை தொடர்ந்து பல நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார். பிறகு ஐபிஎல் 2024ல் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார் பந்த். ஐபிஎல் 2024ல் டெல்லி அணிக்காக 13 இன்னிங்ஸ்களில் 446 ரன்கள் குவித்தார். பிறகு டி20 உலக கோப்பையிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். 8 போட்டிகளில் மொத்தம் 171 ரன்கள் எடுத்தார். பிறகு சென்னையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தி இருந்தார் பந்த். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 99 ரன்கள் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

இன்று புனேவில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறார். பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ரியாத்தில் நடைபெறுகிறது. ரிஷப் பந்த் ஒருவேளை ஆர்சிபி அணிக்கு வந்தால் அவர்களின் விக்கெட் கீப்பர் தேவை மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெண்டுமே சரியாகிவிடும். மேலும் கேப்டன்சியும் கொடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதுவரை கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணிக்கு கோப்பையை வாங்கி தர பந்த் உதவலாம். இந்நிலையில், இந்த சாத்தியமான நகர்வு யதார்த்தமாக மாறுமா என்பதை பார்க்க ஆர்சிபி-யின் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.