சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு இல்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்வார்கள். இதையொட்டி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. தீபாவளிக்கா 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரயில்கள் […]
