2024 பாராளுமன்ற தேர்தலின் போது தோதான குறியீட்டை இடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள விடயம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
2024.09.21 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலின் போது ஏற்கெனவே வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையாலும், அத்துடன் 2024.10.26 ஆந் திகதி நடாத்தப்படவுள்ள அல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளர்களின் இடது கைப் பெருவிரலில் தோதான குறியீடு இடுவதற்கு உள்ளமையாலும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38(3)(ஆ) ஆம் பிரிவின் பிரகாரம், வாக்காளர் தோதான குறியீட்டினால் அடையாளமிடல் சம்பந்தமாக எழக்கூடிய சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக 2024.11.14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் தோதான குறியீட்டை இடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையிலுள்ள வேறேதேனுமொரு அறிவிக்கப்படுகின்றது. விரலில் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும் என்றும் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..