ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது – பிரியங்கா காந்தி

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தில் இருந்த 2 வீரர்கள் மற்றும் ராணுவ சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்நிலையில், குல்மார்க் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு-காஷ்மீர் குல்மார்க்கில் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தாக்குதலில் இரண்டு ராணுவ சுமை தூக்கும் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ஒரு நாகரீக சமூகத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது, இதற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது” என்று பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.