ஸ்டார்ட் அப், ரியல் எஸ்டேட்டில் முதலீடு..
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82வது வயதிலும் தொடர்ந்து விடாது நடித்துக்கொண்டிருக்கிறார். தனது நடிப்பில் கிடைக்கும் பணத்தை தொடர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கெனவே மேற்கு மும்பையில் ரியல் எஸ்டேட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார்.

மும்பை கிழக்கு பகுதியில் 10 வீடுகள்…
தற்போது தனது மகனுடன் சேர்ந்து மும்பை கிழக்கு பகுதியில் உள்ள முலுண்ட் என்ற இடத்தில் 10 வீடுகளை விலைக்கு வாங்கி இருக்கிறார். மொத்தம் ரூ.24.95 கோடி மதிப்பில் இந்த வீடுகளை வாங்கி இருக்கின்றனர். ஓபேராய் ரியாலிட்டி நிறுவனம் கட்டி வரும் கட்டிடத்தில் இந்த வீடுகளை வாங்கி இருக்கின்றனர். அனைத்து வீடுகளும் 3 மற்றும் 4 படுக்கை கொண்ட வீடுகள் ஆகும். 10 வீடுகளும் சேர்த்து மொத்தம் 10216 சதுர அடி கொண்டது ஆகும். இது தவிர 20 கார்பார்க்கிங்கும் வாங்கி இருக்கின்றனர். இதில், 8 வீடுகள் 1049 சதுர அடி கொண்டதாகும். இரண்டு வீடு தலா 912 சதுர அடி கொண்டதாகும்.
பதிவுக்கட்டணமாக ரூ.1.50 கோடி செலுத்தி இருக்கின்றனர். 10 வீட்டில் அமிதாப்பச்சன் 4 வீடுகளையும், அபிஷேக் பச்சன் 6 வீடுகளையும் வாங்கி இருக்கின்றனர். வாடகையை கருத்தில் கொண்டு அமிதாப்பச்சன் அதிக அளவில் மத்திய தர வீடுகளில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சன் இதுவரை 2020-லிருந்து 2024 வரை ரியல் எஸ்டேட்டில் ரூ.194 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளார். இப்போது வாங்கி இருக்கும் வீடுகளையும் சேர்த்து 200 கோடி ரூபாய் அளவுக்கு மும்பையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் அமிதாப்பச்சன் ரூ.100 கோடி அளவுக்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து இருக்கிறார்.

ரியல் எஸ்டேட்டில் பாலிவுட் பிரபலங்கள்..
மும்பை போரிவலி மற்றும் ஓசிவாராவில் அலுவலகம் மற்றும் குடியிருப்பில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள அமிதாப்பச்சன் தொடர்ந்து ரியல் எஸ்டேட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் என்று ஸ்குயர் யார்டு என்ற ரியல் எஸ்டேட் அமைப்பு தெரிவித்துள்ளது. அமிதாப்பச்சன் மட்டுமல்லாது ஜான்வி கபூர் ரூ.169 கோடியும், ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோனே ஆகியோர் ரூ.156 கோடியும் அஜய் தேவ்கன் தனது மனைவியுடன் சேர்ந்து ரூ.110 கோடியும் முதலீடு செய்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs