ஆட்டோமேடிக் கார் வாங்குவது சிறந்ததா? நகர்ப்புற சாலைகளுக்கு ஏற்ற கார் எது?

வாகனங்கள் நமது வாழ்க்கையை மிகவும் சுலபமாக்குகின்றன. அதிலும் கார் என்பது பலரின் கனவாகவே இருக்கிறது. கார் வாங்கும் கனவை இலட்சியமாக வைத்துக் கொண்டு இயங்கும் பல குடும்பங்கள் உள்ளன. கார் வாங்கும் வாய்ப்பு வந்தால், அது தொடர்பான பல கேள்விகள் எழுகின்றன. எந்த வகை கார் என்பது முதல் எவ்வளவு பட்ஜெட், மைலேஜ் என நீளும் கேள்விப் பட்டியலில், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இரண்டு கார்களில் எதை வாங்கலாம் என்ற கேள்வியும் இடம் பெறுகிறது.

கார் வாங்குபவர் வசிக்கும் இடம், அவர் தனது வாகனத்தைப் பயன்படுத்தும் இடம் என்பது உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் ஆடோமேடிக் கார் வாங்குவதைப் பற்றி முடிவு செய்யலாம். நகர்ப்புற சாலை, கிராமப்புற சாலை, சாலைகளின் தன்மை (கரடுமுரடானதா என்பது போன்ற) என கார் அதிகம் ஓடக்கூடிய சாலையும் எந்த வகைக் காரை வாங்குகிறோம் என்பதை முடிவு செய்யும்.

வழக்கமான காருக்கும், ஆட்டோமெடிக் எனப்படும் தானியங்கி கார்களுக்கும் சிலபல வித்தியாசங்கள் உள்ளன. நகரில் கார் வாங்குபவர்கள், போக்குவரத்து நெரிசல்கள், சிக்னல்கள் மற்றும் அடிக்கடி நிறுத்தங்களை எதிர்கொள்வது போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது. எனவே, ஆட்டோமேடிக் மற்றும் வழக்கமான கார் என இரண்டு விருப்பங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தானியங்கி கார் (Automatic Car)

நன்மைகள்:  நகர்ப்புற போக்குவரத்தில் அடிக்கடி கிளட்ச் மற்றும் கியர் மாற்ற வேண்டிய தேவை இருக்கும். எனவே தானியங்கி கார்கள் சிறந்தது. கியர்களை மாற்றும் வேலை குறையும். இதனால் ஓட்டுநர் சோர்வை குறைக்கிறது. ஆட்டோமேட்டிக் கார்கள் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் இடைப்பட்ட சாலைகளில் ஓட்டுவதை எளிதாக்குகிறது, ஏனெனில் ஓட்டுனர் ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக்குகளை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும்.அதிக போக்குவரத்து நெரிசலில் கிளட்சை மீண்டும் மீண்டும் அழுத்தும் தேவை இல்லை என்பதால், வாகனம் ஓட்டும் அனுபவம் நிறைவானதாக இருக்கும்.

ஆட்டோமேடிக் கார் விலை: ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் பொதுவாக மேனுவல் கார்களை விட விலை அதிகம்.

எரிபொருள் நுகர்வு: வழக்கமான தானியங்கி பரிமாற்றங்களைக் கொண்ட மாதிரிகள் பொதுவாக வழக்கமான கார்களை விட அதிக எரிபொருளளை பயன்படுத்தக்கூடியவை. இருப்பினும், புதிய தானியங்கி அமைப்புகளில் (CVT மற்றும் AMT போன்றவை) எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளது.

வழக்கமான கார் (Manual Car)

நன்மைகள்: மேனுவல் டிரான்ஸ்மிஷனில், டிரைவருக்கு கியர்களை மாற்றுவதில் முழுமையான கட்டுப்பாடு உள்ளது, இதனால் அவர் தனது டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப காரை ஓட்ட முடியும். அதேபோல, கியர் உள்ள கார்கள் பொதுவாக தானியங்கி கார்களை விட விலை மலிவானவை. சேவை மற்றும் பராமரிப்பு செலவுகளும் குறைவாக இருக்கும். மேனுவல் கார்கள் பொதுவாக சிறந்த மைலேஜைக் கொண்டுள்ளன.

மேனுவல் கார்களில் அடிக்கடி கிளட்ச் மற்றும் கியர் மாற்ற வேண்டியிருக்கும். இது நகர்ப்புற போக்குவரத்தில் மிகவும் சோர்வை ஏற்படுத்தக்கூடியது. ட்ராஃபிக் உள்ள இடங்களில், கியர் உள்ள மேனுவல் கார் ஓட்டுவது காலப்போக்கில் சிரமமாகிவிடும்.

எனவே, நகர்ப்புற சாலைகளுக்கு ஒரு தானியங்கி சிறந்தது. அதற்கு காரணம், எப்போதுமே  கடுமையான போக்குவர நெரிசலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், சிறந்த கட்டுப்பாடு மற்றும் எரிபொருள் திறன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு மேனுவல் கார் சிறந்தது. தானியங்கி கார்கள் நகர்ப்புற சாலைகளுக்கு மிகவும் வசதியானவை. அதே நேரத்தில் கியர் உள்ள கார்கள் எரிபொருள் திறன் மற்றும் குறைந்த விலை காரணமாக கவர்ச்சிகரமானதாக இருக்கலாம்.  அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் நின்று செல்லும் சூழ்நிலைகளை எதிர்கொண்டால், தானியங்கி கார் சிறந்த வழி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.