சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 160 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்புகள் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் நடைபெற்ற தேசிய ஆயுர்வேத தின நிகழ்ச்சியில் பங்கேற்ற […]