`கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. சூர்யா, பாபி தியோல் உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, சூர்யாவின் 44-வது திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், 45-வது திரைப்படத்தின் இயக்குநர் ஆர். ஜே பாலஜி ஆகியோரும் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய பாடலாசிரியர் விவேகா, “படத்தைப் பார்த்துவிட்டு உங்களிடம் நிறைய விஷயங்களைச் சொல்லியிருந்தேன். சிறுத்தை சிவா நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். முற்றிலும் ஒரு புதிய மனிதராக சூர்யா சார் மாறி நடித்திருக்கிறார். அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத் . தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லை இப்படம் எட்டும்.” எனக் கூறினார்.
இவரை தொடர்ந்து மேடையில் பேசிய பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் மதன் கார்க்கி, ” புஷ்பா படத்துக்கு வசனம் எழுதிட்டு இருந்தேன். அப்போ வந்து சிவா சார் கதை `கங்குவா’ கதையை சொன்னாரு. அவர் சொல்லும்போது இது சாத்தியமான்னு நினைச்சேன். ஒவ்வொரு துறையும் சிறப்பாக பணியாற்றி இருக்காங்க. இந்தப் படத்தின் மூலமாக சூர்யா சாரோட நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அவர் ரொம்பவே அர்ப்பணிப்போட வேலை பார்க்ககூடிய ஒரு நபர். எல்லாத்தையும் விட சூர்யா சார் ஓட ரசிகர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில மூன்று பாடல் எழுதியிருக்கிறேன். விவேகா எழுதிய `மன்னிப்பு’ என்ற பாடல்தான் எனக்கு மிகவும் பிடிச்ச பாடல். மிகப்பெரிய ஒரு குழுவோட சேர்ந்து பணியாற்றியிருக்கேன். பாகுபலிக்கு பிறகு இவ்வளவு மிகப்பெரிய டீம் உடன் சேர்ந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. கங்குவா 10, 15 பாகங்கள் கூட வர வாய்ப்பு இருக்கிறது.” என முடித்துக் கொண்டார்.
கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “சூர்யா சாருடன் படம் பண்ணுவதற்கு முன்பே `கங்குவா’ ஆரம்பிசிட்டாங்க. சூர்யா சார், ஞானவேல் சார் இந்தப் படத்தப்பத்தி பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு இந்தப் படம் எடுத்துட்டு போகும். சினிமாவைச் சேர்ந்த எல்லோருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும். எல்லாத்தையும் இந்தப் படம் பெருமைப்பட வைக்கும். மிகப்பெரிய ஒரு நடிகர் சூர்யா சார். அவர் கதையை எப்போதும் சிறப்பாக தேர்ந்தெடுக்குறாரு.” என்றார்
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…