Kanguva Audio Launch: `சூர்யா சார் அரசியலுக்கு வந்து பல வருடம் ஆகிடுச்சு!'- இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி

`கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. சூர்யா, பாபி தியோல் உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, சூர்யாவின் 44-வது திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், 45-வது திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலஜி ஆகியோரும் பங்கேற்றிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் பேசிய அர்.ஜே.பாலாஜி, “தமிழ் சினிமாவோட முதல் மூன்று நபர்களை தேடினால் ரெண்டு இடத்துல சிவா சார்தான் இருப்பார். அந்த அளவிற்கு அவர் ரொம்ப நல்லவர். இதே நேரு ஸ்டேடியம்ல நான் நிகழ்வை தொகுத்து வழங்கியிருக்கேன். இன்னைக்கு `சூர்யா – 45′ இயக்குநராக வந்திருக்கேன். இதுக்கெல்லாம் காரணம் சூர்யா சார் என்மேல வைத்த நம்பிக்கைதான். சமீபத்துல இரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இருக்கும்போது ஒரு பெரிய இயக்குநருடைய உதவி இயக்குநர்கள் அதே ஹோட்டல்ல இருந்தாங்க. சாப்பிட்டு முடிச்சதும் என்கிட்ட அவங்க `இந்த பெரிய இயக்குநர்களின் கதையெல்லாம் சூர்யா சார் ரிஜெக்ட் பண்ணியிருக்கார். உங்களை எப்படி இயக்குநராக தேர்ந்தெடுத்தாரு’னு கேட்டாங்க.

நான் சிரிச்சிட்டு போயிட்டேன். சூர்யா சார் என்மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. டிவிட்டர்ல `what are you cooking bro’னு கேட்கிறீங்க. பயங்கர மாஸாக அடுத்த வருஷம் சமைச்சு தரப்படும். அதுக்கு நான் உத்தரவாதம். போஸ் வெங்கட் சார் அரசியல் பற்றி சில விஷயங்கள் பேசியிருந்தார். தேர்தலில் நிற்பவர் மட்டும் அரசியல்வாதி கிடையாது. ஒரு ரோட்ல ஒரு மரம் விழுந்துகிடக்கும்போது அதை எடுத்துப் போடுகிறவரும் அரசியல்வாதிதான். அப்படி பார்த்தால் சூர்யா சார் அரசியலுக்கு வந்து பல வருஷம் ஆகிடுச்சு. மாற்றம் பவுண்டேஷன் மூலமாக படித்த பலரையும் எனக்கு தெரியும். அவங்க பலருக்கு உதவி பண்றாங்க. அப்படியான விதையை சூர்யா சார் போட்டு 25 வருஷம் ஆகிடுச்சு. இதுக்குப் பிறகு அவர் தனியாக அரசியலுக்கு வரணும்னு நான் விரும்பல. இங்க இருந்து அவர் செய்கிற விஷயங்களையே நான் பெரிய அரசியலாக பார்க்கிறேன். ” என முடித்துக் கொண்டர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.