பிரமாண்டமாக உருவாகியுள்ள `கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. சூர்யா, பாபி தியோல் உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, சூர்யாவின் 44-வது திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், 45-வது திரைப்படத்தின் இயக்குநர் ஆர். ஜே பாலஜி ஆகியோரும் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் போஸ் வெங்கட், “ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு நடிகர் ரசிகர்களை வழிநடத்தணும். எப்படினா…சூர்யா சார் மாதிரி வழிநடத்தணும். உங்களை மாதிரி வழிநடத்தணும். ரசிகர்களுக்கு தர்மம் செய்ய சொல்லி கொடுக்கனும். உதவி செய்ய கற்று தரணும். இதையெல்லாம் தாண்டி அறிவையும் படிப்பையும் கொடுத்திடணும். அதுக்குப் பிறகு அரசியலுக்கு வரணும். நிறையப்பேரை படிக்க வைக்கணும். ஒரு தலைவன் ரசிகனை முட்டாளாக வைத்திருக்கக்கூடாது. அறிவாளியாக வைத்திருக்கணும். அப்படி பார்த்தால் சூர்யா சார் நீங்க கண்டிப்பா அரசியலுக்கு வரணும். தமிழ் சினிமாவுல கமல் சாருக்குப் பிறகு நுணுக்கமான நடிகராக சூர்யா சார் இருக்கார்.” என்றார்.
இதனையடுத்து வந்து பேசிய யோகி பாபு, “சிவா சார்கூட என்னுடைய முதல் திரைப்படம் வீரம்தான். படப்பிடிப்போட கடைசி நாள்ல அஜித் சார் `இனி நீங்க எங்களுடைய அனைத்து திரைப்படத்திலையும் இருப்பீங்க’னு சொன்னார். அப்புறம் வீரம், வேதாளம், விஸ்வாசம்னு எல்லா திரைப்படத்திலையும் இருப்பேன். நான் `தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்துல சூர்யா சார்கூட நடிச்சேன். இப்போ சிவா சார் இயக்கத்துல `கங்குவா’ படத்துல நடிச்சிருக்கேன். நான் சும்மா சொல்லல…கூட பிறந்த அண்ணன் மாதிரிதான் எனக்கு சூர்யா சாரும், கார்த்தி சாரும். ரொம்பவே கடின உழைப்பை சூர்யா சார் செலுத்துவார். தமிழ் சினிமா மட்டுமில்ல நீங்க உலக சினிமாவுக்கும் போகணும்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…