விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவிருக்கிறது.
தமிழக முழுவதுமிருந்து தொண்டர்கள் வி.சாலையை நோக்கிப் புறப்பட ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகரான சௌந்தர ராஜன் தன்னுடைய ‘மண்ணுக்கும் மக்களுக்கும்’ அமைப்பினருடன் சென்னையிலிருந்து சைக்கிளிலேயே வி.சாலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். மீனம்பாக்கம் அருகே அவர்கள் சென்ற போது சௌந்தர ராஜனை சந்தித்துப் பேசினோம், ‘எங்களோட அமைப்பு மூலமா சென்னைல இருந்து ஒரு 35 பேர் சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்.

மாநாடு பற்றி மக்களுக்கு விளம்பரப்படுத்தும் விதமா இப்படி பண்றோம். சென்னைல இருந்து வி.சாலை 160 கி.மீ வருது. இதை குறிக்கிற வகையில 160 மரக்கன்றுகளை போற வழியில இருக்க ஊர்ல எல்லாம் நடப்போறோம். பிகில் ஆடியோ விழாவுல கூட அண்ணன் என்னையப் பத்தி பேசியிருப்பாரு. கட்சி தொடங்குன பிறகும் விஜய் அண்ணனை ஒரு ரெண்டு முறை சந்திச்சுட்டு வந்தேன். அவர் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா விஜய் அண்ணன் சமத்துவத்தைப் பேசக்கூடிய தலைவரா இருப்பாரு. இயற்கை வளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய தலைவரா இருப்பாரு. தமிழ்நாடு முழுக்க இருந்து எங்க அமைப்ப சேர்ந்த 250 பேர் எங்களை மாதிரியே மரம் நட்டுக்கிட்டே மாநாடு நோக்கி வர்றாங்க. எங்களோட ஆதரவு என்னைக்கும் அண்ணனுக்கு இருக்கும்.’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs