`வேலாயுதம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. விஜய்யுடன் ஜெனிலியா, ஹன்சிகா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்திருப்பதை ஒட்டி இயக்குநர் மோகன் ராஜா ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெறவிருக்கிறது.
அரசியல் மாற்றமே வரும்
இந்த பதிவில் அவர், “விஜய்யின் அரசியல் பாதை சிறப்பாக அமைந்திட என்னுடைய வாழ்த்துகள். நாளை போடப்படும் அடித்தளம் ஒரு நீடித்த மரபுக்கு வழிவகுக்கும்!” எனப் பதிவிட்டிருக்கிறார். வேலாயுதம் திரைப்படத்தில், “5 வருஷத்துக்கு ஒரு தடவை உங்களோட கோபத்தைக் காட்டும்போது ஆட்சி மாற்றம் வருதுல. அப்பப்போ உங்க கோபத்தைக் காட்டிப் பாருங்க, அரசியல் மாற்றமே வரும்!” என விஜய் ஒரு வசனத்தைப் பேசியிருப்பார்.
On the #13YearsofVelayudham day,
I Feel Elated in Wishing my dear most @actorvijay only THE BEST in his upcoming POLITICAL JOURNEYLet the Foundation Laid Tomorrow Lead to a Lasting Legacy #TVKMaanadu#Velayudham pic.twitter.com/RTdoC7DChh
— Mohan Raja (@jayam_mohanraja) October 26, 2024
அந்த வசனத்தையும் இந்த காணொளியில் இணைத்து, “வேலாயுதம் திரைப்படத்தின் எண்ணங்கள் உண்மையாகும் என நம்புகிறோம். அன்புள்ள நண்பருக்கும், அவரின் அபிமானிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!” என்பதையும் சேர்த்துப் பதிவிட்டிருக்கிறார் மோகன் ராஜா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…