இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதற்கேற்ப பல நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பலவிதமான அம்சங்கள் பொருந்திய ஸ்மார்ட்போன்களை சந்தைகளில் களமிறக்கி வருகிறது. ஸ்மார்ட்போன்கள் சந்தையில், வெவ்வேறு விலை வரம்புகளில் பல வகையான கிடைக்கின்றன. இருப்பினும், ஸ்மார்ட்போன் வாங்கும் போது, உங்களுக்கான சிறந்த ஸ்மார்போனை தேர்ந்தெடுக்க, சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஸ்மார்போனின் தரம் மற்றும் கேமரா செயல்திறன் உள்ளிட்ட சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். நீங்கள் வாங்கப்போகும் ஸ்மார்ட்போனில் (Smartphone) என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்பே யோசித்து, அதற்கு ஏற்ப போனை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் வாங்கும் போன் நிச்சயம் உங்களுக்கும் உங்களது பணிகளுக்கும் தேவையான அம்சங்களை கொண்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சிலர் சரியான ஐடியா இல்லாமல் தவறான ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து பின்னர் வருத்தப்படுகின்றனர்.
ஆபரேட்டிங் சிஸ்டம்
ஸ்மார்போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அது வேகமாக செயல்படும் வகையிலானதாக இருக்க வேண்டும் ஸ்மார்ட்போனின் செயலாக்க சக்தி, அதன் ஆபரேடிங் சிஸ்டத்தை பொறுத்துய ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மாறுபடும். எனவே, அது நவீனமான அப்டேட் வெர்ஷனை கொண்டதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
வடிவமைப்பு
ஸ்மார்போனை தயாரிக்க பிளாஸ்டிக் முதல் பிரீமியம் கண்ணாடி மற்றும் உலோகம் வரை, பல விதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் உங்களுக்கு ஏற்ற தரமான நேர்த்தியான போனை தேர்வு செய்ய வேண்டும். தொலைபேசியின் தடிமன் 8 மிமீக்கு குறைவாக இருந்தால்ம, போனின் தோற்றம் ஸ்டைலானதாக, மார்டனானதாக இருக்கும். அதே சமயம் கனமான தொலைபேசிகளில் பெரிய பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை நீண்ட நேரம் பேட்டரி ஆயுளை கொடுக்கும் தரமான போனாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தேவைக்கேற்ப தொலைபேசியை வாங்க வேண்டும்.
சிறந்த கேமரா அம்சங்கள்
கேமிராவின் தரத்தை பொறுத்தவரை மெகாபிக்சல்களின் எண்ணிக்கையை விட சென்சாரின் அளவு முக்கியமானதாக இருக்க வேண்டும். பெரிய சென்சார்கள் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த படங்களை எடுக்க உதவும். போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) இருந்தால் நல்லது. அதிக மெகாபிக்சல் ஜூம் சிறந்த படங்களைக் கிளிக் செய்கிறது. நீங்கள் உயர்நிலை அல்லது பிரீமியம் ஃபோனில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், டெலிஃபோட்டோ அல்லது பெரிஸ்கோப் லென்ஸைத் தேட வேண்டும்.
5ஜி இணைப்பு அடிப்படையிலான அம்சம்
போன்களில் பல வகையான வசதிகள் உள்ளன. தற்போது 5ஜி இணைப்பு பற்றி அதிகம் பேசப்படுகிறது. தொலைபேசி மென்பொருள் புதுப்பிப்புகள் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஃபோன்கள் குறைந்தது மூன்று வருட OS புதுப்பிப்புகளுடன் வாங்கப்பட வேண்டும். 5G இணைப்பு, வேகமாக சார்ஜ் செய்தல் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இன்று அத்தியாவசியமாகிவிட்டன.
AI அம்சம்
தொலைபேசியில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான உரை மற்றும் தானியங்கு மொழிபெயர்ப்பு போன்ற அம்சங்கள் இருந்தால் நல்லது. அதன் உதவியுடன், பல பணிகள் எளிதாகின்றன.