இணையம் இல்லாமல் வாழ்க்கை முழுமையடையாது என்றும் சொல்லும் நிலைக்கு இன்று வந்துவிட்டோம். சில மணி நேரங்கள் இணையத்தை முடக்கினால், தனித்திருப்பதுபோல தோன்றுகிறது. வாழ்க்கை தொடர்பான அனைத்து வேலைகளும் இணையம் மூலமாகவே செய்யப்படுவதும், தற்போது மக்கள் OTT-ஐ அதிகம் பயன்படுத்துவதும் இண்டர்நெட்டின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. நமது இணையத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பல பிராட்பேண்ட் திட்டங்கள் உள்ளன. உங்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
எக்ஸிடெல் பிராட்பேண்ட் 300எம்பிபிஎஸ்
Excitel இன் திட்டம் மாதம் 499 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒன்பது மாதங்களுக்கு இந்த திட்டத்தில் இணைந்தால், கூடுதலாக மூன்று மாதங்கள் இலவச சேவையைப் பெறுவார்கள். அதாவது ஒன்பது மாத விலையில் மொத்தம் 12 மாதங்கள் இணைய சேவை கிடைக்கும். இது தவிர, இந்தத் திட்டத்தில், Amazon Prime, Disney + Hotstar, SonyLIV மற்றும் ALTBalaji உட்பட 18 OTT இயங்குதளங்களின் சேவைகளையும் பெற முடியும்.
இதுமட்டுமின்றி இதில் 150க்கும் மேற்பட்ட சேனல்களும் கிடைக்கும். 300 Mbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இந்தச் சலுகை தற்போது இந்தியாவில் 35க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது.
Excitel இன் பிற திட்டங்கள்
Excitel இன் ரூ.734 திட்டம் 21 OTT ஆப்ஸ் மற்றும் 37 பிரீமியம் கேபிள் டிவி சேனல்களுடன் 400 Mbps வரை வேகத்துடன் கிடைக்கிறது. ரூ.604 மாதாந்திர திட்டம் 300 Mbps வேகம் மற்றும் 21 OTT சேனல்களை வழங்குகிறது. ரூ.554 திட்டத்தில் 200எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 37 பிரீமியம் டிவி சேனல்களை அனுபவிக்க முடியும்.