TVK : `அதிமுக ஓட்டு விஜய் கட்சிக்குச் செல்லும்!' – சொல்கிறார் புகழேந்தி

அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக-வை ஒருங்கிணைப்பது கஷ்டமாக உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

புகழேந்தி

அவர் எந்தக் காலத்திலும் பின்வாங்கி விட வேண்டாம். விஜய் மாறுதலுக்காக வருகிறார். விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாறுதல் வேறு மாதிரி இருந்திருக்கும்.

விஜய்யால் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பாதிப்பு வரும். அதிமுக ஓட்டு விஜய்க்குச் சென்று விடும். புதிய வரவுகளால் அதிமுக-வுக்குத்தான் பெரிய பாதிப்பு ஏற்படும். பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும், எம்.ஜி.ஆர் ஆட்சி வேண்டும் என்ற நினைக்கிறார்கள்.

TVK| Vijay – விஜய் – தவெக

அதிமுக-வை தற்போதுள்ள தலைவர்கள் நடத்தவில்லை. பாஜக தான் நடத்துகிறது. தற்போது ரெய்டு செல்லும் போது எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்கவில்லை.

 மேலும் பாஜக-வை பார்த்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் பயம். எஸ்.பி.வேலுமணி பாஜக கனவில் இருக்கிறார். அதனால் அவர் எதுவும் பேச மாட்டார்.  எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்தால் அனைத்தும் மாறிவிடும்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்துவதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறியது எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் தற்போது திமுக-வை கை காண்பிக்கிறார்.” என்று குற்றம்சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.