நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியின் வி.சாலையில் தற்போது நடைபெறவிருக்கிறது.
அதற்காக நேற்று இரவு முதலே தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் வந்தபடி இருக்கின்றனர். விஜய்யின் இந்த மாநில மாநாட்டிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி “தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்” என்று வாழ்த்தி தெரிவித்த இருக்கிறார்.

இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ❤️ @tvkvijayhq
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 27, 2024
“இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று சிவகார்த்திகேயனும் தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.
Congratulations Thalapathy @actorvijay Anna on this incredible milestone #TVKMaanaadu
Bring the same passion and dedication to politics that you’ve shown in cinema. Wishing you a great success on this new journey !!!— Jayam Ravi (@actor_jayamravi) October 27, 2024
“சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா ” என்று ஜெயம் ரவி வாழ்த்தி இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து , “உங்கள் பார்வை பலருக்கு நேர்மறையான மாற்றத்தையும் வெளிச்சத்தையும் கொண்டு வரட்டும்” என்று வெங்கட் பிரபுவும், “உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அர்ஜுன் தாஸும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
“உங்கள் அற்புதமான தொடக்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். உங்கள் திரைப்படங்கள் மூலம் எங்களில் பலருக்கும் நீங்கள் உண்மையிலேயே உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். விரைவில் உங்கள் அரசியல் பயணத்திலும் நினைவுகூரப்படுவீர்கள், பாராட்டப்படுவீர்கள்.
My heartfelt wishes to @actorvijay sir, for your wonderful start today, You have been truly an inspiration to many of us not only through your films alone, soon will be remembered and appreciated for your political journey too in the coming years…
I am sure today will be a…— Vasanth Ravi (@iamvasanthravi) October 27, 2024
இன்று உங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று வசந்த் ரவி வாழ்த்தி இருக்கிறார். மேலும், விஜய் அண்ணாவின் உரையை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றேன். இந்தப் புதிய பயணம் அவருக்கு பாஸிடிவ்வையும், வெற்றியையும் தரட்டும்” என்று சிபி சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து சசிகுமார், ” உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல் வாழ்த்துகள்… விஜய் சார்” வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நடிகர் சதீஷ், ” திரைத்துறையைப் போல் இதிலும் வெற்றிக் கொடி நாட்ட வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார். தவிர நெல்சன், விக்ராந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். “அன்புள்ள விஜய் சார், சினிமாவை விட்டுவிட்டு தேர்தல் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய முடிவு. உங்கள் மிகப்பெரிய பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று ஆர்.ஜே பாலாஜி வாழ்த்தி இருக்கிறார்.
சாக்ஷி அகர்வால்,”விஜய் மாநாட்டிற்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். வரலாற்றைக் காண தயாராக இருக்கிறேன். இந்தப் பயணத்தை ஒன்றாகக் கொண்டாடுவோம்” நெகிழ்ச்சியாக வாழ்த்திப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY