சென்னை: மாநிலம் முழுவதும் இன்றுமுதல் கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் மளிகை பொருட்கள் உள்பட தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தீபாவளியையொட்டி, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.500க்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீபாவளி பலகாரம் தயாரிக்க தேவையான பொருட்களும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை […]