BSNL 4G இணைய வேகத்தை அதிகரிக்க… நீங்கள் செய்ய வேண்டியவை

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர், தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தியதன் விளைவாக, பல மொபைல் சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர். மலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. 

பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க்

தொலைத் தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம், கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது . இதன் மூலம் இணைய வேகம் அதிகரிக்கும் என்பதோடு, கட்டணங்களும் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

பல நகரங்களில் BSNL 4G சேவை

எனினும், பிஎஸ்என்எல் நிறுவன சிம் பயன்படுத்துபவர்கள் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனையை சந்திக்கின்றனர். BSNL பல நகரங்களில் 4G சேவையை தொடங்கியுள்ளது என்றாலும் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனைகள் உள்ளன. இணையம் இல்லாமல் வாழ்க்கை முடங்கி விடும் என்ற நிலைக்கு இன்று வந்துவிட்டோம். அன்றாட வாழ்க்கை தொடர்பான அனைத்து வேலைகளும் இணையம் மூலமாகவே செய்யப்படுவதால், இணைய வேகம் சிறப்பாக இருந்தால், தடையின்றி வேலை செய்ய இயலும் என்பதை மறுக்க இயலாது.

நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணம்

BSNL க்கு அரசாங்கம் வழங்கிய ஸ்பெக்ட்ரம் பலவீனமாக இருப்பதால் BSNL வழங்கும் 4G நெட்வொர்க் சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 700 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. 2100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மூலம் கிடைக்கும் நெட்வொர்க் மிகவும் நன்றாக இல்லை என கூறப்படுகிறது. 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் பெரும்பாலும் 5ஜிக்கு பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பிஎஸ்என்எல் 4ஜிக்கும் இதனை பயன்படுத்தலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.