தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் விஜய்.
மாநாட்டு முன்னேற்பாடுகள் திறம்பட செய்யப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்தை விட அதிகம் கூட்டம் வந்ததால் பல குளறுபடிகள் ஏற்பட்டன.
விக்கிரவாண்டி செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டுக்கு வரும் வழியில் சாலை விபத்துகள் ஏற்பட்டன. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்.
“நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்
திரு. JK.விஜய்கலை, திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்
திரு. வசந்தகுமார், கழகத் தோழர், பாரிமுனை, சென்னை
திரு. ரியாஸ், கழகத் தோழர், பாரிமுனை, சென்னை.
திரு. உதயகுமார், கழகத் தோழர், செஞ்சி
மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த
திரு.சார்லஸ், கழகத் தோழர், வில்லிவாக்கம், சென்னை
ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.
கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்திரு. JK.விஜய்கலை,…
— TVK Vijay (@tvkvijayhq) October 28, 2024
கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs