“கமல் மாதிரி இல்லாமல், நன்றாக தெளிவாக பேசினார் விஜய்" – சொல்கிறார் செல்லூர் ராஜூ

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பது சம்பந்தமாக மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ பேசும்போது, “விஜய்யின் படங்கள் போலவே அவருடைய கட்சி மாநாட்டு தொடக்கம் நன்றாக உள்ளது, போகப்போக தான் கட்சியின் செயல்பாடுகள் தெரிய வரும்.

TVK | விஜய்

விஜய்யின் மாநாட்டால் தொண்டர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கும் போது கலைஞர் கேலி, கிண்டல் செய்தார், கலைஞர் அதிமுகவுக்கு செய்த இடையூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல, அதிமுக மிகப்பெரிய அடக்குமுறைகளை எதிர்க் கொண்டு வந்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு இன்னும் காலங்கள் உள்ளன, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், விஜய்க்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து சொல்லி இருக்கிறார், அதே நேரத்தில் ஆர்.எஸ்.பாரதி மிக கேவலமாக கிண்டல் செய்துள்ளார், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொன்னதை வைத்து கூட்டணி என முடிச்சு போட வேண்டாம், த.வெ.க கொள்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டால் எதற்கு அதிமுகவில் இருக்க வேண்டும்? நாங்களும் அவர் கட்சியில் சேர்ந்து விடலாமே?

செல்லூர் ராஜூ – விஜய்

நடிகர் கமல் மாதிரி இல்லாமல் மாநாட்டில் விஜய் நன்றாக தெளிவாக பேசினார், கமல் கட்சி தொடங்கும்போது டார்ச் லைட் வைத்திருந்தார், இப்போது டார்ச் லைட் மட்டுமே உள்ளது, பேட்டரியை காணோம்,

விஜய் மாநாட்டில் நல்ல தலைவர்கள் குறித்து தனது தொண்டர்களிடம் பேசியுள்ளார், இதை நாம் வரவேற்க வேண்டும், திராவிட மாடல் ஆட்சி என்பதே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பணம் கொடுத்து, விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியில் உள்ளவர்கள் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என குரல் எழுப்பி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது எத்தனையோ புயல்களை தாண்டியும், ஆயிரக்கணக்கான போராட்டங்களை தாண்டியும் மக்களுக்கான ஆட்சியை கொடுத்தார். திமுகவுக்கு எதிராக அதிமுக செயல்படுவதுபோல விஜய்யும் செயல்படுகிறார், எடப்பாடி பழனிசாமி கூறும்போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி இருக்காது,

திராவிட மாடல் ஆட்சி குறித்து நாங்கள் சொன்னதை தான் விஜய் சொல்கிறார், அதிமுகவின் குரலாக தான் விஜய் ஒலித்து இருக்கிறார், போக போக தான் விஜய் கட்சியின் செயல்பாடுகள் தெரியும், திமுக-வில் உள்ள 60 சதவிகித இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதால் திமுக-வுக்கு விஜய்யை வாழ்த்த மனமில்லை, திமுகவின் இளைஞர் பட்டாளம், விஜய் கட்சிக்கு வந்ததால் திமுகவினர் விமர்சிக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.