சென்னை: தவெக தலைவர் விஜய் தனது கட்சி மாநாட்டில் அதிமுகவை விமர்சிக்கவில்லையே ஏன்? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். “அதிமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை,” என்று பெருமிதப்பட்டுள்ளார். நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் திமுக, பாஜக என பல கட்சிகளை பாசிச கட்சிகள் என கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இது பேசும்பொருளாக மாறியதுடன், ஊடகங்களில் விவாதங்களும் […]
