வாஷிங்டன்: அமெரிக்காவின் போயிங் நிறுவனம், நாசா விண்வெளி மையத்துடன் இணைந்து ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை தயாரித்து உள்ளது. புதிய விண்கலத்தில் பயணம் செய்து, தரச் சான்று அளிக்கும் பொறுப்பு சுனிதா வில்லியம்ஸிடம் வழங்கப்பட்டது.
இதன்படி கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 8 நாட்கள் பய ணமாக சுனிதா சென்றார். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா தங்கியிருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் சுனிதாவை பூமிக்கு அழைத்து வர திட்டமிடப் பட்டு உள்ளது.
இந்த சூழலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் வெளியிட்ட வீடி யோவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் மாளிகை மற்றும் உலகம் முழுவதும் தீபாவளியை கொண்டாடும் அனை வருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு பூமியில் இருந்து 260 மைல் தொலைவில் இருந்து தீபாவளியை கொண்டாடும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட இந்திய பண்டிகைகளை எனக்கு எடுத்துரைத்து உள்ளார். இந்திய கலாச்சாரத்தோடு என்னை நெருக்கத்தில் வைத்திருந்தார். நன்மை, தீமையை வெற்றி கொண்ட நாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம். இது கொண்டாட்டத் தின் தருணம். இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் தீபாவளி அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையில் கடந்த திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில் 600 இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் பங்கேற்றனர். விழாவில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்று பேசினார். அவர் கூறும்போது, ‘‘இந்திய வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறார். அவரால் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இதன்காரணமாகவே வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டா டப்படுகிறது’’ என்றார்.