ஹர்திக் பாண்டியாவுக்கு ஐஸ் வைக்கும் இளம் வீரர் – மும்பை ரீட்டென்ஷன் செய்யுமா?

Mumbai Indians | ஐபிஎல் 2024 ரீட்டென்ஷன் லிஸ்ட் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிறது. 10 அணிகளும் ரீட்டென்ஷன் லிஸ்டைய தயார் செய்துவிட்டன. தோனி, விராட், ரோகித் போன்ற பிளேயர்கள் அந்தந்த அணியிலேயே விளையாடுவார்களா? அல்லது ஏலத்துக்கு செல்வார்களா? என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. தோனி, விராட் கோலி ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ரீட்டெயின் செய்துவிடும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் அந்த அணியில் விளையாடுவாரா? அல்லது ஏலத்துக்கு செல்கிறாரா என்பது மட்டும் பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறது.

எம்ஐ அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கன்பார்ம் லிஸ்டில் இருக்கிறார்கள். ரோகித் பெயர் அதில் இருக்கிறதா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். அதற்குள்ளாக இன்னொரு இளம் வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஐஸ் வைதிருக்கிறார். பாண்டியா தான் கஷ்டமான காலங்களில் தனக்கு துணையாக இருந்ததாகவும் அவர் புகழ்ந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, இஷான் கிஷன் தான்.

இந்தியா தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை என கோபித்துக் கொண்டு இந்தியா திரும்பியவர் தான் இஷான் கிஷன். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியபோதும், அதனை கேட்காமல் இருந்ததால் ஒழங்கு நடவடிக்கைக்கு உள்ளானார். அதன்பிறகு ஜார்க்கண்ட் அணிக்காக ரஞ்சி போட்டி விளையாடினார். இப்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் இஷான் கிஷன், ” ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பிளேயர் எனக்கு நண்பராக கிடைத்தது மகிழ்ச்சி. அவர் என்ன விதத்திலும் எனக்கு வழிகாட்டியாகவும், துணையாகவும் இருக்கிறார்.” என கூறியுள்ளார்.

மேலும், இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடும் வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் எந்த பவுலராக இருந்தாலும் நொறுக்கி தள்ளிவிடுவேன் என்றும் இஷான் கிஷன் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவேன் என்றும் இஷான் கிஷன் கூறியிருக்கிறார். ஆனால், இம்முறை இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரீட்டெயின் செய்வதாக தெரியவில்லை. அதனால், எந்த அணி இஷான் கிஷனை ஏலம் எடுக்கப்போகிறது என்பது ஐபிஎல் ஏலத்தின்போது தெரிய வரும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.