துபாயில் உள்ள ஆட்டோட்ரோம் ரேஸ் ட்ராக்கில் நடிகர் அஜித் porsche gt3 cup car என்ற காரை டெஸ்ட் ட்ரைவ் செய்துள்ளார். இதனை அவரது செய்தி தொடர்பாளரான சுரேஷ் சந்திரா சமுக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
“துபாய் ஆட்டோட்ரோம் சர்க்யூட்டில் போர்ஷே ஜிடி3 கப் காரை சோதனை செய்வதில் மகிழ்ச்சி!” என்ற அஜித்தின் செய்தியோடு புகைப்படங்களும் வீடியோக்களும் பகிரப்பட்டிருந்தன.

போர்ஸ்சே ஜிடி3 கப் கார் ஒரு பிரத்யேக ரேஸ் காராகும். டவுன்ஃபோர்ஸ் மற்றும் ஹேண்டலிங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது.
இந்த கார் ரேஸ்ட்ராக்கில் சிறப்பாக செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் மணிக்கு 300 முதல் 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

காரின் திறனை புரிந்துகொண்டு ரேஸிங் டெக்னிக்குகளை உருவாக்க ரேசர்கள் இவ்வாறு சோதனை ஓட்டம் செய்வது குறிப்பிடத்தக்கது. இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும்.
துபாயின் ஆட்டோட்ரோம் (Autodrome) ரேஸிங் சர்க்யூட் உலகப் பிரசித்தி பெற்றது. ஆடம்பரமானதும் கூட. இதில் அதிவேகமாக பயணிக்க முடிவதுடன், தனித்துவமான சவால்களும் உள்ளது. பல சர்வதேச போட்டிகள் இங்கு நடைபெறுவதுண்டு.
நடிகர் அஜித் பல துறைகளில் ஆர்வம் மிகுந்தவர் என்பதை நாம் அறிவோம். அவரது கார் ரேஸிங் கேரியர் மீண்டும் சூடு பிடிக்கத்தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் அவரது தலைமையில் ரேசிங் குழு ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Thrilled to be testing the Porsche GT3 Cup car at the Dubai Autodrome Circuit! #AjithKumarRacing #PorscheGT3 #DubaiAutodrome #RacingTesting #Venusmotorcycletours #Aspireworldtours pic.twitter.com/EuR0q0SqED
— Suresh Chandra (@SureshChandraa) October 29, 2024