சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமியில் உள்ள மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவு செய்துள்ள காணொளியில் அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதியிலும் இருந்து தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததுடன், பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் தீபாவளி கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகப் பெருமிதம் கொண்டார்.
அத்துடன் அமெரிக்காவில் நடந்த தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்றதற்காக அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றி தெரிவித்தார்.
தன்னுடைய வாழ்த்து காணொளியில், அவரது தந்தை தீபாவளி மற்றும் பிற இந்தியப் பண்டிகைகளைக் கற்பித்து கலாசார வேர்களைத் தன்னுள் நிறுவியதாக நினைவு கூர்ந்தார்.
5 மாதங்களுக்கு முன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப பிரச்னை காரணமாகக் குறித்த நாளில் பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
#WATCH | Washington DC | White House Diwali Celebrations | NASA Astronaut Sunita Williams shares a video message on Diwali from the International Space Station.
She says, “Greetings from the ISS. I want to extend my warmest wishes for a Happy Diwali to everyone celebrating… pic.twitter.com/YEv3wNAxW9
— ANI (@ANI) October 28, 2024
இதனால் அவர், விண்வெளியிலேயே தீபாவளி கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரச்னையைச் சரி செய்யும் பணி நடைபெறும் நிலையில் சுனிதாவும் அவருடன் தங்கியுள்ள வில்மோரும் விரைவில் பூமிக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…