பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளராக வீட்டிற்குள் சென்றவர் அர்னவ். இவருக்கும் திவ்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திவ்யா கர்ப்பமாக இருந்த சமயத்தில் அர்னவ் – திவ்யாவிற்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அர்னவ் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தான் அர்னவ் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருந்தார். இரண்டாவது வாரம் அந்த வீட்டிலிருந்து எவிக்ட் ஆனார்.
இந்நிலையில் திவ்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பல விஷயங்கள் அவருடைய ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார்.
” நிறைய பேர் என்னோட முன்னாள் கணவர் அர்னவ்னு சொல்றாங்க. அதை முதலில் தெளிவுபடுத்த நினைக்கிறேன். எங்க ரெண்டு பேருக்கும் சட்டப்பூர்வமா விவாகரத்து ஆகல. இருவரும் பிரிந்து தனித்தனியா வாழுறோம் அவ்ளோதான்! எனக்கு எல்லாமே என் குடும்பம் தான். சில மாதங்களுக்கு முன் எங்க அம்மா உடம்பு முடியாம இறந்துட்டாங்க. அதனால இந்த வருஷம் எங்களுக்கு எந்தப் பண்டிகையும் கிடையாது.
என் அப்பா தான் பசங்களை பார்த்துக்கிறாங்க. செவ்வந்தி ஷூட்டிங் பிஸியா போயிட்டு இருக்கு. நான் ரொம்ப டஃப் ஆன சூழலில் இருந்தப்பவும் இந்த சீரியல் புரொடக்ஷன் டீம் எனக்கு ரொம்பவே சப்போர்ட் ஆக இருந்தாங்க. எனக்கு ஏற்ற மாதிரி கதைக்களத்தை மாத்தினாங்க அவங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.
சிங்கிள் மதரா குழந்தைகளை வளர்க்கிறது ரொம்ப கஷ்டம். ஆனாலும் எல்லாத்தையும் எதிர்கொண்டுட்டு இருக்கேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. அவங்களுக்காகவே வாழுறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
யாரையும் நம்பாதீங்க அதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற அட்வைஸ் என்றவர் நான் பிக்பாஸ் வீட்டுக்குப் போறதா சில தகவல்கள் வருது. ஆனா, நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகல. எனக்கு சின்ன குழந்தை இருக்கு. ஷூட்டிங் போயிட்டு வர்றதுக்குள்ளயே அவ ரொம்ப என்னை மிஸ் பண்ணுவா. அவளைப் பிரிஞ்சு அத்தனை நாளெல்லாம் என்னால இருக்க முடியாது. நீங்க எல்லாரும் உண்மை பக்கம் இருந்திருக்கீங்க. எனக்கு உறுதுணையா, பக்கபலமா இருந்திருக்கீங்க உங்க எல்லாருக்கும் என் நன்றி” என பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…