ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய போறீங்களா… இந்த தப்பை செஞ்சுடாதீங்க…

Smart TV Cleaning Tips in Tamil: ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. ஆனால் சரியாக செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.. . எனவே, ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். டிவியை சுத்தம் செய்வதற்கான சரியான வழி என்பது உங்களுக்குத் தெரியவில்லையே என, கவலைப்பட வேண்டாம். உங்கள் ஸ்மார்ட் டிவியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். 

ஸ்மார்ட்டிவியை சுத்தம் செய்வது தொடர்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவது பாதுகாப்பானது. இதில் ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து விளக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் டிவியை எவ்வாறு சுத்தம் செய்வது

1. டிவியின் மின்சார இணைப்பை துண்டிக்கவும் 

சுத்தம் செய்யும் முன் எப்போதும் டிவியை ஆஃப் செய்ய வேண்டும். சுத்தம் செய்வதற்கு முன்பு அதன் மின் இணைப்பை துண்டிக்கவும். அதோடு அதன் பிளக்கையும் நீக்குவது பாதுகாப்பானது. இதன் மூலம் எந்த வித மின்சார அதிர்ச்சியையும் தவிர்க்கலாம்.

2. மென்மையாக சுத்தம் செய்யவும்

ஸ்மார்ட் டிவி திரையை உங்கள் பலத்தை பிரயோகித்து மிகவும் கடினமாக தேய்க்க வேண்டாம். மென்மையாக சுத்தம் செய்யவும்.

3. மென்மையான துணியைப் பயன்படுத்தவும்

ஸ்மார்ட் டிவி திரையை சுத்தம் செய்ய எப்போதும் மென்மையான, உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தவும். நீங்கள் விரும்பினால், நீங்கள் துணியை சிறிதளவு ஈரப்படுத்தலாம், ஆனால் துணி அதிக ஈரமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. தூசியை அகற்ற ஏர் ப்ளோயரரைப் பயன்படுத்தவும்

டிவியின் பக்கங்களிலும் போர்ட்களிலும் தேங்கியிருக்கும் தூசியை அகற்ற ஏர் ப்ளோயரைப் பயன்படுத்தலாம்.

5. ஸ்கிரீன் கிளீனர் பயன்படுத்தவும்

டிவியின் திரையில் கரைகள் அதை அகற்ற நீங்கள் சானிடைசர் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் கூட பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது செய்யக் கூடாத சில தவறுகள்

1. சுத்தம் செய்ய ஒருபோதும்  தண்ணீரை தெளிக்காதீர்கள்

தண்ணீர் அதிகம் பயன்படுத்தினாலோ அல்லது தெளித்தாலோ திரையில் ஊடுருவி டிவியை சேதப்படுத்தும்.

2. கடினமான பிரெஷ்களை பயன்படுத்த வேண்டாம் 

கடினமான பிரெஷ்களை பயன்படுத்தினால் திரையைக் கீறி அதன் பிரகாசத்தைக் குறைக்கும்.

3. கடினமான  துணிகளை பயன்படுத்த வேண்டாம்

டிவியை துடைக்க காகித துண்டுகள் அல்லது மற்ற கடினமான துணிகளை பயன்படுத்த வேண்டாம். இவை திரையை கீறலை ஏற்படுத்தலாம்.

4. இரசாயனங்கள் பயன்படுத்த வேண்டாம் 

டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய எந்த இரசாயனங்களையும் பயன்படுத்த வேண்டாம்., இந்த பொருட்கள் திரையை சேதப்படுத்தும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.