“விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை” – விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை: விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியிருப்பதாவது: “எடுத்த எடுப்பிலேயே 30 சதவீத வாக்குகளை விஜய்யால் வாங்க முடியுமா? எம்ஜிஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுக காரர். தேர்தல் அனுபவம் உள்ளவர். அவருக்குப் பின்னால் வந்த எந்த நடிக்கருக்கும் எம்ஜிஆருக்கு … Read more

உயிரோடிருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணம்: ஓய்வூதியம் கேட்டு டெல்லி சென்ற ராஜஸ்தான் பெண்கள்

புதுடெல்லி: உயிரோடிருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணங்களில் உள்ள நிலையில் தங்களுக்கு பென்ஷனும், நீதியும் கேட்டு ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள் டெல்லி வந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சதரன் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்கு தேவி (69). கணவரை இழந்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு வரை, முதியோர் பென்ஷனைப் பெற்று வந்தார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பென்ஷன் வரவில்லை. இதுதொடர்பாக தனது கிராம நிர்வாக அதிகாரியைக் கேட்டபோது, இவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் உள்ளதென்றும், அதனால்தான் பென்ஷன் நிறுத்தப்பட்டது என்றும் … Read more

Amaran: 'சிவகார்த்திகேயன் பிடித்திருக்கும் துப்பாக்கி, அவரின் உழைப்புக்கான பரிசு!' – Rise Of SK

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி ரிலீசாக இன்று வெளியாகியிருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு அவருடைய கரியரில் தீபாவளி ரிலீஸ் என்பது ரொம்பவே முக்கியமானது. கொண்டாட்டமான இந்த விடுமுறை நாட்களில் ஒரு மாபெரும் ஹிட்டை கொடுப்பது அவர்களின் ஓட்டத்தை இன்னும் வேகப்படுத்தும். சிகாவின் அறிமுக படமான ‘மெரினா’ வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 12 ஆண்டுகளில் ‘அமரன்’ அவரது இரண்டாவது தீபாவளி ரிலீஸ். Amaran இரண்டாண்டுகளுக்கு முன்பு ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி சரியாக போகவில்லை. இப்போது … Read more

இளையராஜா இசையமைத்த சிம்பொனி நெ. 1 – 2025 ஜனவரியில் வெளியாகும் என அறிவிப்பு…

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையின் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ளார். சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் திரையுலகில் நீங்காத இடம்பிடித்துள்ள இளையராஜா இசையில் உருவான பல பாடல்கள் இன்றளவும் பல படங்கள் வெற்றியடைய உறுதுணையாக இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள இளையராஜா … Read more

Lucky Baskhar Review: அட்டகாச துல்கர், மீனாட்சி; நிதிக் குற்றப் பின்னணியில் ஒரு மிரட்டல் த்ரில்லர்!

1992-ம் ஆண்டு மும்பை மகதா வங்கியில் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜராகப் பணிபுரியும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), காலை நடைப்பயிற்சியில் இருக்கும்போது திடீரென சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அங்கிருந்து கதை மூன்று ஆண்டுகளுக்குப் பின் செல்ல, அதே வங்கியில் சாதாரண கேஷியராக (காசாளர்) வேலை செய்யும் பாஸ்கர், தன் மனைவி சுமதி (மீனாட்சி சௌத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்), தந்தை, தம்பி, தங்கை ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். எப்படியாவது தன் … Read more

“2031-ல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு” – அண்ணாமலை கணிப்பு

சென்னை: “ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி வரும். 2026ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக இருக்கும். 2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் … Read more

வக்பு வாரிய ஊழல்: ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது கூடுதல் குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: டெல்லி ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான். இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாகவும் ரூ.100 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்தது. மேலும் அவரை கடந்த செப்.2-ம் தேதி கைது செய்தது. இந்நிலையில் அவருக்கு எதிராக அமலாக்கத் துறை நேற்று 110 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் … Read more

Brother Review: அதே வேலை வெட்டிக்குப் போகாத ஹீரோ, அதே பழைய காமெடி; முடியல `பிரதர்'!

சென்னையில் வசித்துவரும் கார்த்திக் (ஜெயம் ரவி) சட்டப்படிப்பைப் பாதியிலே விட்டுவிட்டுப் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் ஜாலியாக நேரத்தைச் செலவிடுபவர். பிறரைப் பற்றிக் கவலைகொள்ளாமல் எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் அவரால் காவல்துறை வரை சென்று அவமானப்படுகிறது அவரின் குடும்பம். அவரது தந்தையும் ரத்த அழுத்தத்தால் மயங்கி விழ, ஊட்டியிலிருக்கும் கார்த்திக்கின் அக்கா (பூமிகா) சென்னைக்குக் கிளம்பி வருகிறார். அப்பாவின் உடல்நிலை சரியாக வேண்டுமென்பதற்காகத் தம்பியைப் பொறுப்பான ஆளாக மாற்றுவதாகச் சபதம் ஏற்று, அவரைத் தன் புகுந்த வீடு இருக்கும் … Read more

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு… முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை…

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் இருந்து நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருட்டுபோனதாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பென் ஸ்டோக்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 17ம் தேதி இங்கிலாந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள கேசல் ஈடன் பகுதியிலுள்ள தனது வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஏராளமான தனிப்பட்ட பொருட்களுடன் அவர்கள் தப்பிச் சென்றனர். … Read more

Bloody Beggar Review: மாளிகையில் மாட்டிக்கொள்ளும் பிச்சைக்காரர்; ஸ்கோர் செய்கிறாரா கவின்?

உழைக்க சோம்பேறித்தனப்பட்டு மக்களிடம் நடித்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் யாசகன் ஒருவனுக்குத் திருட்டுத்தனமாக ஆடம்பர மாளிகை ஒன்றில் தங்கும் வாய்ப்பு கிடைக்க, அங்குச் சென்று தெரியாமல் மாட்டிக்கொள்கிறான். அந்த வில்லங்கமான வீட்டில் சொத்தைப் பிரித்துக்கொள்வதற்காக வரும் வாரிசுகள் இடையே சிக்கிக்கொள்ளும் அந்த யாசகன் என்ன ஆனான், அவனுக்குப் பின்னிருக்கும் பிளாஷ்பேக் என்ன என்பதே இந்த `பிளடி பெக்க’ரின் கதை. ஜாலியாக யாசகம் கேட்கும் ஆரம்பக் காட்சிகளிலும் சரி, அந்த வீட்டில் மாட்டிக்கொண்டு பயத்தில் முழிக்கும்போதும் சரி, வெரைட்டி காட்டியிருக்கிறார் … Read more