நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழை வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நவம்பர் முதல் வாரத்திலிருந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை … Read more

இந்தியா – சீனா படைகள் வாபஸ் பெறும் பணி நிறைவு: இன்று தீபாவளி இனிப்பு பரிமாற்றம்

லடாக்: கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா- சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று முடிவடைந்து விட்டது. தீபாவளியை முன்னிட்டு, இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினர் இன்று இனிப்பு வழங்குகின்றனர். இந்தியா – சீன எல்லையில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 2017-ம் ஆண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது முதல் இரு தரப்பினர் இடையே மீண்டும் … Read more

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரிஷப், ராகுல், அஸ்வின் உள்ளிட்ட 10 இந்திய நட்சத்திரங்கள்

IPL 2025 Mega Auction Tamil | ஐபிஎல் 2025 தொடருக்காக தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்துக்கு சமர்பித்துவிட்டன. இந்த பட்டியல் இப்போது வெளியாகியிருக்கும் நிலையில், பல முக்கிய இந்திய பிளேயர்களே இம்முறை ஏலத்துக்கு வந்திருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்றால் ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது குறித்த விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.  கேஎல் ராகுல் லக்னோ சூப்பர் … Read more

Amaran : மேஜர் முகுந்தைக் காக்க முன்னின்று மாண்ட வீரன்… சிப்பாய் விக்ரம் சிங் பற்றி தெரியுமா?

மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை அமரன் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. முகுந்தின் கதையைப் பேசும்போது மறக்க முடியாத மற்றொரு நபர்தான் சிப்பாய் விக்ரம் சிங். ஹரியானாவைச் சேர்ந்த இவர், 2002ம் ஆண்டு தனது பத்தொன்பது வயதில் ராணுவத்தில் இணைந்தார். இவர் ராஜ்புத் ரெஜிமெண்டின் 17வது பட்டாலியனில் சேர்க்கப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து 2012ல் 44 ராஷ்ட்ரியா ரைஃபில்ஸ் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு மாற்றப்பட்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார். சிப்பாய் விக்ரம் சிங்கின் மனைவி … Read more

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமனம்… 24 பேர் கொண்ட குழுவை நியமித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் பிரபலமான TV5 தொலைக்காட்சி நிறுவனரான பி.ஆர். நாயுடு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமான சித்தூரைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 24 பேர் கொண்ட இந்த குழுவில் 12 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 12 பேரில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர், கர்நாடக 3, தமிழ்நாடு 2, குஜராத் … Read more

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும். இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்பவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம். அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. … Read more

`இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றனர்!' – காங்கிரஸைச் சாடி, தேச ஒற்றுமை பற்றி மோடி பேசியது என்ன?

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அரசியல் லாபத்துக்காக தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் ‘நகர நக்சல்கள்’ என்று பேசியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாள் தினம் இன்று. 2014ம் ஆண்டு முதல் படேலின் பிறந்தநாள் தேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேச ஒற்றுமை தினம் தீபாவளியுடன் இணைந்து வந்துள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய மோடி, “பல நாடுகள் பிரிந்து … Read more

பட்டாசு வெடித்தபோது காயமடைந்த 20 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் 20 பேர். இந்த 20 பேரில் 20 சதவிகிதம் தீக்காயம் தான் அதிகபட்சமான பாதிப்பு என்கிற நிலையில் இருப்பதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.31) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி அரசு விடுமுறை நாளில் பணியில் உள்ள … Read more

தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை

அயோத்தி: தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டன. இது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தியும் எடுத்தனர். ராமர் வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்புவதை , தீபாவளியாகவும், தீப உற்சவமாகவும் வட இந்தியாவில் 5 நாள் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை மிக பிரம்மாண்டமாக … Read more

55 லட்சம் டூ 13 கோடி.. கேகேஆர் அணியில் ரிங்கு சிங் – அள்ளிக்கொடுத்த ஷாருக்கான்

Rinku Singh | ஐபிஎல் 2025 தொடருக்காக பிளேயர்கள் தக்க வைத்த பட்டியலை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன. கேகேஆர் அணியில் ஆச்சரியப்படும் விதமாக ரிங்கு சிங் முதல் பிளேயராக 13 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அணிக்கு விசுவாசமாக இருந்ததால் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்திருக்கிறது கேகேஆர் அணி. 7 ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரிங்கு சிங், சம்பளமாக வெறும் 55 லட்சம் ரூபாயை மட்டுமே பெற்றார். அவரை விட இளம் பிளேயர்கள், புதிதாக … Read more