ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையத்தில் போலீஸார் விசாரணை மேற்கொள்ளதடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் துறவறம் பூண்டுள்ள தனது 2 மகள்களையும் மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, கோவையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரான காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற … Read more

ஓய்வு பெற குறுகிய காலம் இருந்தாலும் நான் இன்னும் பதவியில்தான் இருக்கிறேன்: வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி ஆவேசம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நேற்றுநடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தான் ஆணையிட்ட உத்தரவின் விவரங்களை நீதிமன்ற பணியாளரிடம் குறுக்கு சோதனை செய்த வழக்கறிஞருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து தலைமை நீதிபதி கூறுகையில், “நீதிமன்றத்தில் நான் என்ன உத்தரவிட்டேன் என்பதை நீதிமன்ற பணியாளரிடம் கேட்டு, குறுக்கு சோதனை செய்ய வழக்கறிஞருக்கு எவ்வளவு தைரியம்? நாளை என் வீட்டுக்கு வந்து நான் என்ன செய்கிறேன் என்று எனது தனிப்பட்ட செயலரிடம் கேட்பீர்கள். வழக்கறிஞர்கள் எல்லாம் … Read more

நைஜீரியா படகு விபத்தில்: 60 பேர் உயிரிழப்பு; 80 பேரை காணவில்லை – 160 பேர் உயிருடன் மீட்பு

அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது. வடக்கு நைஜீரியாவின் நைஜர் மாநிலம், முண்டி என்ற இடத்தில் வருடாந்திர இஸ்லாமிய திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற சுமார் 300 பேர் நேற்று முன்தினம் இரவு நைஜர் ஆற்றில் ஒரு படகில் கபாஜிபோ என்ற இடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். படகில் ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக … Read more

சிறப்பு சட்டம் இயற்றி வணிகர்களை காக்க விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை சிறப்பு சட்டம் இயற்றி வணிகர்களை பாதுகாக்க வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார் இன்று தமிழக வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம். “ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவாக விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயமாக அதனை திரும்ப பெற வேண்டும். நடிகர், நடிகைகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை போனால், அதை எதிர்ப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தயாராக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு … Read more

Thangalaan OTT: கோட்டே வந்துடுச்சு.. தங்கலான் ஏன் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை.. இதுதான் காரணமா?

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில்

பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியா – நியூசிலாந்து நாளை மோதல்

துபாய், 9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது . வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.’ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது … Read more

ஈரானில் விஷ சாராயம் குடித்த 26 பேர் உயிரிழப்பு

டெஹ்ரான், ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடுமையான சட்டங்களைக் கொண்ட இஸ்லாமிய ஆட்சி அமைந்த பிறகு, மது அருந்துதல் தடை செய்யப்பட்டது. இருப்பினும் ஈரானியர்கள் பலர் கள்ளச்சந்தைகளில் மதுபானங்களை வாங்குகின்றனர். மேலும் வீட்டிலேயே சிலர் சாராயம் தயாரித்து குடிக்கின்றனர். இந்த நிலையில், ஈரானின் வடக்கு மாகாணங்களில் உள்ள மசர்தரன் மற்றும் கிலன் ஆகிய பகுதிகளிலும், மேற்கு ஹமதான் மாகாணத்திலும் மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்த 26 பேர் … Read more

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளித்தற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸடாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “கடந்த சந்திப்பில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தைக் கூடிய … Read more

ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கில் இனி உச்ச நீதிமன்றம் விசாரணை – நடந்தது என்ன?

புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள அதன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில், காவல் துறை மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். கோவை மாவட்டம் பூண்டியை அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு இதன் நிறுவனராக உள்ளார். ஈஷா யோகா மையத்தின் சார்பில், பல்வேறு வித யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், … Read more

கோடநாடு கொலை வழக்கு : தனியார் வங்கி அதிகாரியிடம் விசாரணை

கோவை சிபிசிஐடி காவல்துறையினர் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் தனியார் வங்கி அதிகாரி உள்ளிடோரிடம் விசாராஇ நடத்தி உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு  ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more