காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சவுமியா அன்புமணி வலியுறுத்தல்

ஜெனிவா, ஐ.நா. மனித உரிமை பேரவையின் 57ம் அமர்வு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகிறது. அதன் 37-ம் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தின் தீமைகள் குறித்தும், அதனால் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார். இதுதொடர்பாக பேசிய அவர், “காலநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும், மிகவும் குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களை பாதிக்கக்கூடிய, அவசரமாக தீர்வு காணப்பட … Read more

“நாடே சுதந்திரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது காந்தி மட்டும்..!" – ஆளுநர் ரவி பகிர்ந்த சம்பவம்

இந்தியாவின் தேசப் பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்தில் காந்தியின் பங்களிப்பை பலரும் நினைவுகூர்ந்தனர். அந்த வரிசையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திரம் குறித்து காந்தி சொன்ன செய்தியை நினைவு கூர்ந்திருக்கிறார். மகாத்மா காந்தி வரலாற்று மனிதர்கள் – மகாத்மா காந்தி காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மகாத்மா காந்தி ஒரு வலுவான … Read more

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணைய தலைவராக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணைய தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு … Read more

ஹரியானா ‘ட்விஸ்ட்’ – பாஜகவில் இருந்து மீண்டும் காங்கிரஸ் திரும்பிய அசோக் தன்வார்!

மகேந்திரகர்: ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் தன்வார் இன்று (அக்.3.) மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் சனிக்கிழமை பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் ஹரியானாவில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் மகேந்திரகரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். ராகுல் தனது பேச்சினை முடித்ததும், தொண்டர்கள் … Read more

சீனாவின் பிறப்பு விகிதம் குறைவதால், நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை 80 சதவீதம் குறையும்…

சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சரிந்து வருவதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சீனா தவிர தென் கொரியா, ஜப்பான், மக்காவு, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்பெயின், போலந்து, பியூடோ ரிக்கா, சிலி ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. சீனாவில் பல தசாப்தங்களாக குழந்தை பெற்றுக்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில், கருவுறுதல் விகிதம் ஒரு … Read more

Our new Boss.. அடுத்தடுத்த பிரமோக்கள்.. மொபைலை வைத்து ஆட்டம் காண்பித்த விஜய் சேதுபதி!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஜய் டிவியின் மற்றொரு சூப்பர் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய ஆட்டத்தை துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற பேச்சுடன் களமிறங்கவுள்ளார் நிகழ்ச்சியின் ஆங்கர் விஜய் சேதுபதி.

'காந்திக்கு பிறகு தூய்மையின் அவசியத்தை எடுத்துரைத்தவர் பிரதமர் மோடிதான்' – அமித்ஷா

காந்திநகர், நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு தூய்மையின் தேவை குறித்து பிரதமர் மோடி எடுத்துக் கூறியிருக்கிறார் என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் பேசியபோது அவர் கூறியதாவது;- “குஜராத்தின் புதல்வர்களான மகாத்மா காந்தியும், பிரதமர் மோடியும் இந்த நாட்டிற்கு தூய்மையை வாக்களித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு, … Read more

பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி

சார்ஜா, 9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி … Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் மந்திரிக்கு ஓராண்டு சிறை தண்டனை

சிங்கப்பூர், கடந்த 1962-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஈஸ்வரன். சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறிய இவர், 1997ம் ஆண்டு அந்த நாட்டு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 2006-ல் லீ ஹெய்ன் லூங்கின் மந்திரி சபையில் இடம்பெற்றார். வர்த்தக உறவுகளுக்கான மந்திரியாகவும், போக்குவரத்துத்துறை மந்திரியாகவும் பதவி வகித்து வந்த இவர், தொழிலதிபர்களிடம் இருந்து, 4,00,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய … Read more

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின்  அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் … Read more