அண்ணா நகர் போக்சோ வழக்கு… விகடன் கட்டுரையும் காவல்துறை விளக்கமும்!

‘தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் அண்ணா நகரில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் செயல்பாடு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியதோடு, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து விகடன்.காம் தளத்தில் `காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ‘திராவிட மாடலே’… கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா?’ என்ற தலைப்பில் அக்டோபர் 2-ம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் தற்போது அந்த கட்டுரைக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் பின் … Read more

தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த சட்டபூர்வ நடவடிக்கை: தமிழக அரசு உறுதி

சென்னை: தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்காத வகையில், காவிரி உபரி நீரை தருமபுரியின் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த சட்டப்பூர்வமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: “தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க அவர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் வழங்கவும் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சிறுதானியங்கள், பயறு வகைகள், … Read more

“சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள்” – உதயநிதியை மறைமுகமாக சாடிய பவன் கல்யாண்

திருப்பதி: “சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது” என்று பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். திருப்பதியில் இன்று (அக்.03) தரிசனம் செய்த பவன் கல்யாண் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது … Read more

ஈரானின் அணுஆயுத கிடங்குகளை குறிவைக்க வேண்டாம்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை… எண்ணெய் கிடங்குகளுக்கு குறி ?

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ஈரானில் உள்ள அணுஆயுத கிடங்குகளை குறிவைக்கக் கூடாது என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் வளங்கள் மீது இஸ்ரேல் குறிவைக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு ஈரானின் எண்ணெய் வளத்தை சார்ந்துள்ள நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனால் பெரும் பொருளாதார சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் … Read more

24 வருஷம் கழித்தும் பழிவாங்கிய இஸ்ரேல்.. இரு வீரர்களை கொன்ற பாலஸ்தீன இளைஞர் ஏவுகணை தாக்குதலில் பலி

டெல் அவிவ்: கடந்த 2000ம் ஆண்டு பாலஸ்தீன நகரமான ரமல்லாவில் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் இப்போது பழிவாங்கியுள்ளது. இஸ்ரேல் வீரர்களைக் கொன்ற அஜீஸ் சல்ஹா என்பவர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பழி வாங்கியுள்ளது. மத்திய கிழக்கு Source Link

நாளை வீடு திரும்பும் ஆருயிர் நண்பர் ரஜினிகாந்த்.. மகிழ்ச்சி தெரிவித்த இசைஞானி இளையராஜா!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வேட்டையன் படம் திரையரங்குகளில் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது அவர் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே கடந்த செப்டம்பர் 30ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக

மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை – இந்தியா கண்டனம்

புதுடெல்லி, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்(USCIRF) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தது. வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான தொடர் அத்துமீறலில் ஈடுபடும் நாடாக அமெரிக்க அரசு வகைப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2024-ல் இந்தியாவில் பல்வேறு தனிப்பட்ட நபர்கள் … Read more

ஜனாதிபதி செயலாளருக்கும் கேட்ஸ் மன்ற சுயாதீன ஆலோசகருக்கும் இடையில் சந்திப்பு

கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். சிறுதேயிலை உரிமையாளர்களை இலக்கு வைத்து செயற்படுத்தப்படும் டிஜிட்டல் விவசாய பரிமாற்ற திட்ட முன்னேற்றம் மற்றும் இலங்கையில் போஷாக்கின்மை நெருக்கடிக்கு எதிர்கொள்வதற்காக திட்டமிட்டுள்ள பாடசாலை உணவு வழங்கல் திட்டம் என்பன குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதி, கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான … Read more

திருச்சி: மாணவர்களிடம் ரூ.33 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா..? போலீஸார் விசாரணை..!

திருச்சி மாநகரில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த சில நாள்களாக, திருச்சி மாநகர போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் உறையூர் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு மேன்சன் அறையில், பிளாஸ்டிக் பையில், 500 ரூபாய் நோட்டுகளாக, ரூ.33 லட்சம் ரூபாய் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அந்த அறையில் தங்கியிருந்த லால்குடியைச் சேர்ந்த பிரபு (வயது 30), கிருஷ்ணன் (வயது … Read more

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்: தமிழக, கேரள பயணிகள் பாதிப்பு

நாகர்கோவில்: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் இன்று 2வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்தின் மேல் டாரஸ் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாகனங்கள் எளிதாக சென்று வருவதற்கும், மார்த்தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையிலும் ரூ.225 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மார்த்தாண்டம் மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தில் இலகு ரக வாகனங்கள், பேருந்துகள் மட்டுமின்றி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம … Read more