“அன்னை சாமுண்டீஸ்வரி அருளுடன் 5 ஆண்டு ஆட்சி செய்வோம்” – தசரா விழாவில் சித்தராமையா பேச்சு

மைசூரு: “எத்தனை சிரமங்கள் வந்தாலும், அன்னை சாமுண்டேஸ்வரியின் அருள் இருப்பதால் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வோம்” என்று மைசூர் தசரா தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் சித்தராமையா, “வண்ணமயமான வார்த்தைகளால் மக்களின் வயிற்றை நிரப்ப முடியாது. அதனால் தான், தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி, மக்கள் நலத்திட்டங்கள் மூலம் சமூக, பொருளாதார ரீதியில் மக்களை வலுவூட்டும் பணியை … Read more

தீபாவளி போனஸ்.. பெண்களுக்கு இலவச சிலிண்டர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்

Free LPG Gas Cylinder: இந்த தீபாவளிக்கு, “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” பயனாளிகள் அனைவருக்கும் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி முன்னாள் அமைச்சருக்கு ஓராண்டு சிறை

சிங்கப்பூர் சிங்கப்பூர் நீதிமன்றம் இந்திய வம்சாவளி முன்னாள் அமைச்சருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. சென்னையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த ஈஸ்வரன் சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறி 1997 ஆம் ஆண்டு அந்த நாட்டு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 2006-ல் லீ ஹெய்ன் லூங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றார். இவர் வர்த்தக உறவுகளுக்கான மந்திரியாகவும், போக்குவரத்துத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தபோது  தொழிலதிபர்களிடம் இருந்து, 4,00,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்து. வழக்குப்பதிவு செய்யப்பட்டு, … Read more

வெளியான ஈரான் ஹிட் ஹிஸ்ட்.. முதல் டார்கெட் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. மொத்தம் 11 தலைகள் குறி?

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் தொடரும் நிலையில், ஈரானின் ஹிட் லிஸ்ட் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், இந்த ஹிட் லிஸ்ட் சர்வதேச அளவில் பதற்றத்தை Source Link

அட விஜய்யோட தளபதி 69 படத்துல இவரும் இருக்காரா.. கூட்டணி பலமாயிட்டே இருக்கே!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் அடுத்தடுத்த நடிகர், நடிகைகளை தயாரிப்பு தரப்பான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கடந்த இரு தினங்களாக அறிவித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நடிகர்கள், நடிகைகளை அறிவிக்கும் வேலை தொடர்ந்து வருகிறது. தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்துள்ளார் அனிருத்.

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

'Cry Of The Hour' Statue : கொலைசெய்யப்பட்ட பெண் டாக்டருக்குச் சிலை; இணையத்தில் எழுந்த விவாதம்!

கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நீதி வேண்டி டாக்டர்கள் ஒரு மாதமாக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சமீபத்தில் போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டு பணிக்குத் திரும்பினர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் திடீரென பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி … Read more

“திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” – ஹெச்.ராஜா விமர்சனம்

சென்னை: “போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்து மது விற்பனையை அறிமுகம் செய்த கட்சியோடு கூட்டணி வைப்பார். மதுபான ஆலை உரிமையாளர்களுடன் … Read more

“காங்கிரஸால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது, ஒருபோதும் நாட்டை வலிமையாக்க முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைவதை ஒட்டி, பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் விடுத்துள்ள செய்தியில், “ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்னும் சிறிது நேரத்தில் முடிவடைய உள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பயணம் செய்தேன். மக்கள் மத்தியில் நான் கண்டுள்ள உற்சாகத்தைப் … Read more