பெய்ரூட்டில் குண்டு மழை: லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை
பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட்டில் இரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இலக்கில் ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவர் வசித்து வந்தார். மேலும், அந்த அமைப்புடன் இணைந்த மருத்துவ தலைமையகம் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது, லெபனான் மக்களை அச்சத்திலும் பரிதவிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாக்களின் கோட்டையான தாஹியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே லெபனானின் தெற்குப் பகுதியில் வான்வழித் … Read more