‘‘மது விற்பனையில் MGR-க்கும், ஜெ-க்கும் உள்ள பங்கு பற்றி யாரும் பேசாதது ஏன்?’’ – அதிமுகவை சீண்டிய திருமாவளவன்
உளுந்தூர்ப்பேட்டை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் இறுதியாக பேசிய திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் விவாததத்துக்கு வழி வகுத்துள்ளார். அந்த மேடையில் திருமாவளவன் பேசியது: 1971-ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்யும் போது, கடும் பொருளாதார சிக்கல் சூழ்ந்த நிலையில், கருணாநிதி கூறிய காரணங்கள், ‘நெருப்பு வளையத்துக்குள் கற்பூரம் சிக்கியுள்ளது, அது தானாகவே … Read more