திருப்பதி பிரம்மோற்சவம் நாளை கோலாகல தொடக்கம்
திருமலை: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்றுகோயிலில் கொடிக்கம்பத்தில்கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனிததர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி மற்றும் திருமலையில் வண்ண விளக்குகள், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. … Read more