18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டாமாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, … Read more

மேற்கு வங்கத்தில் 11 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பு மீண்டும் தீவிரமாக செயல்பட சதி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், அம்மாநிலத்தில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்றுமுன்தினம் சோதனை நடத்தியது. கொல்கத்தா, பர்கானாஸ், அசன்சோல், ஹவுரா, நாடியா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மாவோயிஸ்ட் அமைப்போடு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். என்ஐஏ கூறுகையில், “மாவோயிஸ்ட் சதி தொடர்பாக … Read more

பைடனின் மோசமான நிர்வாகம் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியதாவது: இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மோசமான நிர்வாகமே காரணம். நான் அதிபராக இருந்தபோது ஈரான் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கு எப்போதும் பணநெருக்கடி இருந்தது. இதனால், ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருந்தனர். ஆனால், கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனது முதல் ஈரானுக்கு பணத்தை வாரி இறைத்தார். இதனால், … Read more

திருஷ்டி சுற்றிப் போட்டதுடன் மிரட்டவும் செய்த நடிகை ஷகிலா.. அந்தப் பக்கம் யாரு தெரியுமா?

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். காமெடியனாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. தொடர்ந்து சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்தார். இவரது சினிமா பயணம் ஒரே படத்தில் மாறியது. இயக்குநர் வெற்றிமாறன் கண்ணிற்கு சூரியின் ஹீரோயிசம் தெரிந்ததன்

ஐ.எஸ்.எல். தொடர்; மும்பை – பெங்களூரு இடையிலான ஆட்டம் டிரா

மும்பை, இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி – பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என சமனில் முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் இரு … Read more

லெபனானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

டமாஸ்கஸ், ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான், நேற்று இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்தால் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான புதிய தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாரானது. தெற்கு லெபனானில் … Read more

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் – 2024.10.26 : எல்பிடிய பிரதேச சபை

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் – 2024.10.26 : எல்பிடிய பிரதேச சபை சட்ட ரீதியான அறிவித்தல்களை வெளியிடுதல் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு அடையாளமிடுவதற்கான திகதி தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடப்பட்டுள்ளது.

4 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தி.மலைக்கு புதிய எஸ்.பி

சென்னை: திருவண்ணாமலைக்கு புதிய எஸ்.பி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்த உத்தரவு: டிஜிபி அலுவலகத்தில் பணியிலிருந்த எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி, திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். அங்கிருந்த எஸ்.செல்வநாகரத்தினம் பங்கிமலை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு துணை ஆணையராக இருந்த எம்.சுதாகர் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அங்கிருந்த கே.பிரபாகர், தாம்பரம் காவல் … Read more

திரிபுராவில் 62 வயது மூதாட்டியை மரத்தில் கட்டிவைத்து எரித்து கொன்ற மகன்கள்

அகர்தலா: மேற்கு திரிபுராவின் சம்பக்நகர் காவல் எல்லைக்குட்பட்ட கமர்பாரி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பெண் ஒருவர்மரத்தில் கட்டப்பட்டு உயிருடன் தீவைக்கப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸார் பெண்ணின் உடலைகைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது 2 மகன்களை கைது செய்தனர். 62 வயதான அந்த மூதாட்டி, தனது கணவர் இறந்த பிறகு தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு … Read more