கனேடிய உயர்ஸ்தானிகர் ,ஜனாதிபதியை சந்தித்தார்

–ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மற்றும் IMF மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.   கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்க தனதும் கனேடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி அநுர … Read more

`மதுவிலக்கு; ஒன்றிய அரசு சட்டமியற்ற வேண்டும்..!' – விசிக மது ஒழிப்பு மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன்

கள்ளக்குறிச்சியில் விசிக மகளிர் அமைப்பின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டிற்கு பா.ம.க, பா.ஜ.க கட்சிகளைத் தவிர்த்துவிட்டு, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என வீடியோ வெளியிட்டு பிறகு அதை நீக்கியது… “மது ஒழிப்பு வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் பேசும். ஆனால் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை” என திருமாவளவன் பேட்டியளித்தது என தொடர்ந்து அரசியல் … Read more

மீஞ்சூர் அருகே சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைந்து இன்ஜின், பெட்டி கழன்றது – 2 மணி நேரம் சேவை பாதிப்பு

சென்னை: அனுப்பம்பட்டு – மீஞ்சூர் இடையே மீஞ்சூர் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி (கப்லிங்) உடைந்து இன்ஜின், பெட்டிகள் தனியே கழன்றது. இதனால், கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் இரண்டரை மணி நேரம் விரைவு, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தெலங்கானா மாநிலம் மஞ்சேரியில் இருந்து தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் பேரளத்துக்கு 42 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பெட்டிகளில் நெல் … Read more

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.6% வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் 3-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 11.6% வாக்குப்பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத் தரவுகளின்படி உத்தம்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14.2%, அடுத்ததாக சம்பா மாவட்டத்தில் 13.3% வாக்குப் பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் 40 … Read more

காந்தி ஜெயந்தி: காந்தி சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

சென்னை:  மகாத்மா காந்தியிடன் 156-வது பிறந்த நாளை முன்னிட்டி, காந்தி சிலைக்கு கவர்னர் ரவி,. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தனர். நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். சென்னையில் காந்தி பிறந்தநாளை  முன்னிட்டு கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.  … Read more

Samantha: மரியாதைதையா நடந்துக்கோங்க.. விவாகரத்து குறித்து சர்சையாகப் பேசிய அமைச்சரை விளாசிய சமந்தா!

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தற்போது பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களாக இருப்பது இரண்டுதான். ஒன்று திருப்பதி லட்டு விவகாரம், மற்றொன்று நடிகர் நாக சைதன்யா – சமந்தா விவகாரத்திற்கு கே.டி.ஆர்.,தான் காரணம் என தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து காட்டுத்தீபோல இணையத்தில் பரவியது. இதனால் டன் கணக்கில் நாக சைதன்யா மற்றும்

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..மதுக்கடைகள் திறக்கப்படும் என வாக்குறுதி

பாட்னா, பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். பாஜக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளுக்கு அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை கைவிட்டார். அரசியலில் என்ட்ரி கொடுப்பதாக அறிவித்தார். மேலும் பீகாரை மையப்படுத்தி அரசியல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். … Read more

சொந்த மண்ணில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இந்த இருவர்தான் முக்கிய காரணம் – ஆகாஷ் சோப்ரா

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடர்களையும் வென்று தோல்வியையே சந்திக்காத அணியாக வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எந்த அணியாலும் வீழ்த்த முடியாததற்கான காரணங்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். … Read more

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கண்டனம்

லண்டன், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதனால், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், … Read more