எல்பிடிய பிரதேச சபை தேர்தல் : வாக்கெடுப்பு நிலையத்தில் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல்

2024.10.26ஆம் திகதி நடாத்தப்பட உள்ள எல்பிடிய பிரதேச சபை தேர்தலின் போது வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.  இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தவிர வேறு எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Vck: `இதைச் செய்தால் மதுக்கடைகள் தானாக மூடிவிடும்..!' – விசிக மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதி பேசியதென்ன?

கள்ளக்குறிச்சியில் வி.சி.க-வின் மகளிர் அமைப்பு சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, “வி.சி.க – தி.மு.க இடையே விரிசல்” என அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். திருமாவளவன் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தி.மு.க சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் … Read more

திரண்ட மகளிர் படை முதல் தீர்மானங்கள் வரை: விசிக மது ஒழிப்பு மாநாடு ஹைலைட்ஸ்

தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என விசிக துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் தீர்மானங்களை வாசித்தார். அதன் விவரம்: இந்திய … Read more

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாலிவுட் நடிகர் கோவிந்தா காயம்: மருத்துவமனையில் அனுமதி

மும்பை: நடிகரும், சிவ சேனா கட்சி (ஷிண்டே அணி) பிரமுகருமான கோவிந்தாவின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கி (ரிவாவல்வர்) தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டுவிட்டது, அவர் தற்போது நலமாக உள்ளார் என்று அவரது மேலாளர் ஊடகப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு வெளியே செல்வதற்கு கோவிந்தா கிளம்பிக்கொண்டிருந்த போது தனது … Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: துணை முதல்வர் உதயநிதியின் தனிச் செயலராக பிரதீப் யாதவ் நியமனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலராக,  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இன்று ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி ஆணை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கோபால், உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். உயர் … Read more

ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழைய தடை.. அதிரடியாக வெளியான அறிவிப்பு.. ஈரான் ஆதரவு தான் காரணமா?

டெல்அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்குள் நுழைய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்க்கு தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அதிரடியாக  அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலத்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் Source Link

சரண்யா மேம் ஓகேவான்னு கேட்டாங்க.. நான் அதுதான் சரின்னு சொன்னேன்.. சசிகுமார் சொல்றத பார்த்தா?

       சென்னை: நடிகர் சசிகுமாரின் சினிமா பயணம் சுப்பிரமணியபுரம் படத்தில் துவங்கியது. இந்த படத்தை இயக்கவும் செய்திருந்தார் சசிகுமார். தொடர்ந்து கோலிவுட்டில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல தளங்களில் செயல்பட்டு வரும் சசிகுமார் அடுத்தடுத்து மிகவும் அழுத்தமான கதைக்களங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் துவங்கிய இவரது பயணம்

டெல்லி விமான நிலையத்தில் 26 ஐபோன்களை கடத்தி வந்த பெண் கைது

புதுடெல்லி, டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஒரு பெண்ணின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் பையில் 26 புதிய மாடல் ஐபோன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஐபோன்கள் டிஷ்யூ பேப்பரில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஐபோன்களை கடத்தி கொண்டு வந்த பெண்ணை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு சுமார் 37 … Read more

சீன தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

• கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முழுமையான ஆதரவளிப்பதாக உறுதி சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.   ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த … Read more

VCK: `தலைவர் கண் அசைத்தால்போதும், டாஸ்மாக்கை அடித்து உடைப்போம்..!' – விசிக எழில் கரோலின்

இன்று கள்ளக்குறிச்சியில் வி.சி.க சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடந்துவருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின், “திருமாவளவன் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் அணி மூலம் மது ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்தார். ஒரு வழக்கறிஞராக கடந்த 30 ஆண்டுகளில் குடும்ப நீதிமன்றம் குடும்ப வன்முறைகள் இந்த மதுவால்தன் நடக்கிறது என்பதை உறுதியாகக் கூறுகிறேன். மது ஒழிப்பு மாநாடு எனவே குடும்ப வன்முறையை தடுக்க வேண்டுமென்றாலும், பெண் குழந்தைகள் பாலியல் … Read more