திருப்பதி ஏழுமலையானை தரிசித்து 11 நாள் விரதத்தை முடித்த பவன் கல்யாண்!
திருப்பதி: ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், திருப்பதி ஏழுமலையானை தரிசித்து, தனது 11 நாள் விரதத்தை நிறைவு செய்தார். இன்று (புதன்கிழமை) விஐபி பிரேக் தரிசனத்தின் போது அவர் சுவாமியை தரிசித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ‘பிராயச்சித்த தீக்ஷா’ … Read more