கடன் வசூல் இலக்கை எட்ட முடியாததால் உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை: 2 உயர் அதிகாரிகள் மீது வழக்கு

ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் சக்சேனா (42). இவர் அங்குள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஏரியா மேனேஜராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேல் அதிகாரிகள் வேலை சார்ந்துகடும் நெருக்கடி கொடுப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்பட்டு 45 நாட்களாக தூக்கிமின்றி தவிப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தன் தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தருண் சக்சேனா வின் … Read more

ஸ்டாலின் மகன் என்ற பிறப்பால் வந்தது தான் துணை முதலமைச்சர் பதவி – ஆர்பி உதயகுமார்!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது ஸ்டாலின் மகன் என்று பிறப்பால் வந்தது;  உழைப்பால் வரவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.  

எச்சரிக்கை… இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கிடுங்க

டிஜிட்டல் யுகத்தில், நமது பல அண்றாட பணிகள் எளிதாகி விட்டது என்றாலும், ஆன்லைன் மோசடி சமப்வங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது. அந்த வகையில் ஆபத்தான செயலி குறித்த தகவலை சைபர் பாதுக்காப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் மக்களின் கிரிப்டோகரன்சியை திருடும் ஆபத்தான செயலியை சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த செயலி 5 மாதங்களாக … Read more

மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மரியாதை…

டெல்லி: மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை  முன்னிட்டு டெல்லியில் உள்ள அவர்களின் நினைவிடங்களில்,  காங்கிரஸ் எம்.பி.யும், மக்களை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி  மலர்தூவி  மரியாதை செய்தார். மகாத்மாகாந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டுல் ஜனாதிபதி திரௌபதி முர்மு. துணை குடியரசு தலைவர் தங்க, பிரதமர் மோடி  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செய்தனர். இந்த நிலையில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் 156வது பிறந்தநாளையொட்டி, … Read more

லஞ்சம் கேட்டு விவசாயிக்கு டார்ச்சர்.. முதல் தவணை 5 ஆயிரம் போதும்.. வசமாக சிக்கிய அதிகாரி

தென்காசி: தென்காசியில் பூந்தோட்டத்திற்கு புதிய மின் இணைப்பு கொடுக்க முதல் தவணையாக 5 ஆயிரமும், மீதி தொகையை பிறகும் கொடுக்குமாறு விவசாயியிடம் கறாராக கூறிய மின் செயற்பொறியாளர் உள்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவில் உள்ள தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வண்டிக்கார மாரிமுத்து Source Link

வனிதா விஜயகுமார் 50 வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறாரு.. பயில்வான் ரங்கநாதன் கிண்டல்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டருடன் ரொமாண்டிக் போஸ் கொடுத்து Save the date என வெளியிட்ட போஸ்டர் ஒன்று நேற்று முதல் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பலமுறை வனிதா விஜயகுமார் திருமணம் செய்த நிலையில், மீண்டுமொருமுறை திருமணம் செய்யப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்க

Health: பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? – உண்மை என்ன? | Amla

பல கடைகளிலும் பெரிய நெல்லிக்காய் தற்போது கண்களில் தட்டுப்படுகிறது. இதன் மருத்துவ குணங்கள் பற்றி சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ.தீபா. ”நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு … Read more

சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

சென்னை: கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 47 பேர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி.,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் … Read more

புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: மூவர் உயிரிழப்பு

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு விமானிகள் மற்றும் பொறியாளர் ஒருவர் என மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து புனே மாவட்டத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த பவுதான் புத்ருக் என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் காலை 6.45 மணியளவில் நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விழுந்தவுடன் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவல் உள்ளூர் போலீஸாருக்கு கிடைத்ததும் … Read more

லெபனான் எல்லையில் 100+ பீரங்கிகள்: ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேல் தரைவழி தாக்குதலின் பின்னணி என்ன?

பெய்ரூட்: லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பீரங்கிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து,ஹிஸ்புல்லா முகாம்களை தரைமட்டமாக்கி வருகின்றன. லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஆகியவை ஈரானின் கைப்பாவையாக செயல்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. … Read more