Vijay: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்.. ஒரே பந்தில் அரசியல் சிக்ஸர் அடித்த விஜய்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் நலமுடன் உள்ளார் என தெளிவாக குறிப்பிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. பலரும் சூப்பர் ஸ்டார் விரைவில்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம்

சென்னை: ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு, அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் கடந்த ஏப்.1 முதல் செப்.30வரையுள்ள காலத்தில் ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை படிவத்தை படித்து ஒப்புதல் பெற வேண்டும். கிராம ஊராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறவேண்டும். தூய்மையான குடிநீர் … Read more

மும்பை இசைக் கச்சேரிக்கு கடும் போட்டி: கள்ள சந்தையில் ஒரு டிக்கெட் ரூ.10 லட்சம் வரை விற்பனை

மும்பை: இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பிரபல ராக் இசைக் குழு கோல்டு பிளே (cold play). இந்த குழுவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அடுத்த ஆண்டு ஜனவரி 18, 19, 21 ஆகியதேதிகளில் கோல்டு பிளேவின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த இசைக் கச்சேரிக்காக மொத்தம் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் இணையம் வாயிலாக அண்மையில் விற்பனை செய்யப்பட்டன. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.6,450ஆகவும் அதிகபட்ச டிக்கெட் விலைரூ.35,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. … Read more

தாய்லாந்தில் பேருந்து தீப்பற்றி 23 பேர் உயிரிழப்பு

பாங்காங்: தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று தீப்பற்றிய விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்தின் மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளிமாணவர்கள் நேற்று பேருந்தில் கல்விச் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். பேருந்தில் 6 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 44 பேர் இருந்தனர். இந்நிலையில் கு கோட்நகரில் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் இந்தப் பேருந்து தீப்பற்றியது. பேருந்தில் தீ மளமளவென பரவியதில் 20 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

ஷிங்கெரு இஷிபா ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்பு

டோக்கியோ ஷிங்கெரு இஷிபா ஜப்பான் நாட்டின் புதிய பிரதமாராக பதவி ஏற்றுள்ளார். அண்மையில் ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி ஷிங்கெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. முந்தைய ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27-ம் தேதி) இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தேர்வு செய்தது. அவர் இன்று (01.10.2024) அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இஷிபா … Read more

சிவாஜி மகனுக்கு திடீரென வந்த கோபம்.. மேடையிலேயே அந்த நபரை போட்டு எப்படி குத்துறாரு பாருங்க!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பங்கேற்று இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் மேடையில் ஒரு நபரை கோபத்துடன் குத்தும் காட்சிகள்

ஈஷா யோகா மையம் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அறக்கட்டளை விளக்கம்

கோவை: ஈஷா யோகா மையம் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கோவை ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது. ஈஷா அறக்கட்டளை இன்று (அக்.01) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஈஷா யோகா மையம் யாரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ, துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. இம்மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சாரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. இந்நிலையில், 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 … Read more

காஷ்மீர் இறுதிகட்ட தேர்தலில் 65.65 சதவீத வாக்குப்பதிவு: அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான இறுதி மற்றும் 3-வது கட்ட தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்ஆணையம் அறிவித்தது. முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று 40 தொகுதிகளுக்கு நடைபெற்றது. தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள், … Read more

காந்தியடிகளின் 155 வது பிறந்தநாள்: மாவட்ட முக்கிய நகரங்களில் நாளை காங்கிரஸ் கட்சி தேசிய விழிப்புணர்வு நடைபயணம்….

சென்னை: காந்தியடிகளின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மற்றும்  மாவட்ட முக்கிய நகரங்களில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய விழிப்புணர்வு  நடைபயணம்  நடைபெற உள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49 வது நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120 வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு காந்திய சிந்தனை, அமைதி, மதநல்லிணக்கம், அகிம்சை, வெறுப்பு அரசியலுக்கு எதிரான பிரச்சாரம், மக்களவை எதிர்க்கட்சித் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்லா இருக்காரு.. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு இதோ!

சென்னை: செப்டம்பர் 30ம் தேதியான நேற்று இரவு திடீரென நடிகர் ரஜினிகாந்த் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என புதிய அறிக்கை வெளியாகி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு