சீனா ஓபன் டென்னிஸ்; அதிர்ச்சி தோல்வி கண்ட ஜெசிகா பெகுலா

பீஜிங், சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெசிகா பெகுலா யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 4-6, 0-6 என்ற செட் கணக்கில் பாலா படோசாவிடம் அதிர்ச்சி … Read more

லெபனான் நாட்டுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள்…? ஹிஸ்புல்லா மறுப்பு

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கடுமையாக தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. தொடர்ந்து மற்றவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. பல மாதங்களாக நடந்து வரும் மோதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் … Read more

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமை நியமனம்

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமையாற்றுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான திருமதி. பீ.எம்.டீ.நிலூசாபாலசூரிய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமனமிக்கப்பட்டுள்ளார். நேற்று (03.10.2024) நடைபொற்ற அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தான் பதவியேற்றது முதல் துறைக்கு கீழ் வரும் பள்ளிகள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் ஆய்வை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாக சென்று அங்குள்ள பள்ளிகள், … Read more

“இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவவே பாஜக அரசு நடத்தப்படுகிறது” – ராகுல் குற்றச்சாட்டு

சோனிபட் (ஹரியானா): நாட்டின் இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பாஜக அரசு நடத்தப்படுகிறது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சோனிபட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “நாட்டில், குறிப்பாக ஹரியானாவில் சிறுதொழில்கள் நலிந்துவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள். ஹரியானா அரசும் நரேந்திர மோடியும் சிறு தொழில் செய்பவர்களை நாசப்படுத்திவிட்டனர். பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தி வங்கிகளின் … Read more

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பயங்கர துப்பாக்கிச் சூடு – பலர் உயிரிழந்ததாக தகவல்

டெல் அவிவ்: இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் இன்று (அக்.01) பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தெற்கு டெல் அவிவ் நகரில் உள்ள யாஃபா பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத … Read more

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்  சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது சென்னை அண்ணாநகர் பகுதியில், கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நிலையில், புகார் கொடுக்க சென்ற சிறுமியின் பெற்றோரை இரவெல்லாம் வைத்து விசாரித்ததுடன்,  அவர்களை தாக்கியதாக அண்ணா நகர் மகளிர் போலீசார் மீது புகார் எழுந்துள்ளது.  இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை … Read more

Rajinikanth Health: மருத்துவமனையில் ரஜினி.. நலம்பெற பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய, பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தற்போது, வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ந் தேதி

ஷகிப் அல் ஹசனுக்கு தன்னுடைய கையொப்பமிட்ட பேட்டை பரிசளித்த விராட் கோலி

கான்பூர், வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. வங்கதேச அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் … Read more

டேட்டிங் செல்ல விடுமுறை; சம்பளமும் உண்டு… எந்த நாட்டில் தெரியுமா?

பாங்காக், அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் வேலைக்கு செல்பவர்களின் தேவைக்காக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு உள்ளிட்டவை சில நிறுவனங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. சில நிறுவனங்களில் சுற்றுலா செல்ல கூட விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்த சூழலில், தாய்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு புதிய சலுகையை அளித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒயிட்லைன் குரூப் என்ற இந்நிறுவனம், பணியாற்றும் ஊழியர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் வகையில் இந்த … Read more