ஜனாதிபதி மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே சந்திப்பு..

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அமெரிக்க தூதுவர், ஜூலி சாங் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்து மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல், அத்துடன் பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் … Read more

ஒன் பை டூ

பழ.செல்வகுமார் பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் உமிழ்ந்திருக்கிறார் ஜெயக்குமார். பாசிச பா.ஜ.க அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சிறையில் வைக்கப்படடிருந்த செந்தில் பாலாஜி வெளியே வந்திருப்பதால், அவரை முதல்வர் வரவேற்றுப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் வெறும் விசாரணைக் கைதி மட்டுமே. அவர்மீதான குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ‘ஜெயலலிதா குற்றவாளி’ என நீதிமன்றம் அறிவித்தபோது, கல்லூரி மாணவிகளைப் பேருந்தோடு சேர்த்து உயிருடன் எரித்துக் கொலைசெய்தவர்கள் அ.தி.மு.க-வினர். மேலும், … Read more

காஞ்சி கோயிலின் ரூ.8 கோடி மதிப்பிலான ‘சோமஸ் கந்தர்’ சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு – மீட்கும் பணி தீவிரம்

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘சோமஸ் கந்தர்’ வெண்கலச் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்புள்ள இந்த சிலையை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட பழங்கால சிலைகளை கண்டறிந்து மீட்கும் பணியில் தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி தினகரன் தலைமையிலான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக … Read more

லடாக்கில் இருந்து நடைபயணம்: டெல்லியில் சோனம் வாங்சுக், ஆதரவாளர்கள் தடுப்புக் காவலில் கைது

புதுடெல்லி: அரசியல் சாசன 6-வது அட்டவணை அந்தஸ்து கோரி லடாக்கில் இருந்து டெல்லிக்கு பாத யாத்திரையாக வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், அவரது ஆதரவாளர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சுய நிர்வாக உரிமை வழங்கப்பட்டுள்ளதைப் போல லடாக்குக்கும் வழங்க வேண்டும், லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், தற்போது ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே … Read more

இஸ்ரேலை நோக்கி 400 ஏவுகணைகள்: ஈரான் தாக்குதலால் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

ஜெருசலேம்: இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியுள்ள ஈரான், 400 ஏவுகணைகளை வீசியுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இஸ்ரேலை நோக்கி 400 ஏவுகணைகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளால், அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர்கள் அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. வானில் பறந்து … Read more

கல்லறைகளை பாதுகாக்கவா தொல்லியல் துறை? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

மதுரை: பழங்கால சின்னங்களையும் கோயில்களையும் பாதுகாப்பது முக்கியம்  என கூறிய நீதிபதிகள், ஆனால், தொல்லியல் துறை கல்லறைகளை பாதுகாப்ப தில்தான் ஆர்வம் காட்டுகிறது, அதற்காகவே  தொல்லியல் துறை  உள்ளது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  கடுமையாக சாடியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  அவரது மனுவில்,  ,” தஞ்சை பெருவுடையார் கோயில் கிபி 1010 ல் கட்டப்பட்டது மற்றும் ஒரு அண்ட அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. … Read more

இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல்.. ஈரான் தாக்குதலுக்கு நடுவே கடும் துப்பாக்கி சண்டை

ஜெருசலேம்: இஸ்ரேலின் ஜாப்பா ரயில் நிலையத்துக்குள் நுழைந்த 2 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 4 பேர் பலியான நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல் போலீசார் 2 தீவிரவாதிகளையும் சுட்டு கொன்றனர். ஒருபுறம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த நாட்டுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது Source Link

Parvathy Nair: அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டார்.. பணம் கேட்டு மிரட்டினார்.. பார்வதி நாயர் வேதனை!

சென்னை: நடிகை பார்வதி நாயர், தன்னை அடித்து துன்புறுத்தியதாக சுபாஷ் என்பவர் அளித்த புகாரில் பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, நடிகை பார்வதி நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்யான புகாரால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்த, சுபாஷ்

'சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது' – பிரதமர் மோடி

சண்டிகார், 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. அதே போல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எனவே இந்த தேர்தலில் நான்கு … Read more

ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணி அறிவிப்பு

சென்னை, நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தமிழக அணி குரூப் டி-யில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் சத்தீஸ்கர், டெல்லி, சவுராஷ்டிரா, அசாம், ஜார்கண்ட், சண்டிகர், ரெயில்வே அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும், என். ஜெகதீசன் … Read more