சீனா ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), யுஞ்சோகெட் பு (சீனா) உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜன்னிக் சின்னெர் 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் யுஞ்சோகெட் பு-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர், ஸ்பெயினின் கார்லஸ் … Read more

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷிங்கெரு இஷிபா பதவியேற்பு

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி ஷிங்கெரு இஷிபா (வயது 67) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் முன்னாள் பிரதமர் பியூமியோ கிஷிடா பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27-ம் தேதி) இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தேர்வு செய்தது. இந்நிலையில், அவர் இன்று (01.10.2024) அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இஷிபா தனது புதிய அமைச்சரவையை விரைவில் அறிவிப்பார் என்று … Read more

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்; பதவிக்கு திருமதி பி.எம்.டி நிலூஷா பாலசூரிய..

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எம்.டி நிலுஷா பாலசூரியவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக உடனடியாக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதியாகப் பணியாற்றிய திரு. ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய அவர்கள் 2024.09.25 ஆம் திகதி முதல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் … Read more

சென்னை: உணவின்றி தவித்த வட மாநில தொழிலாளர் பட்டினிச்சாவா? சிகிச்சை பலனின்றி மரணம்; நடந்தது என்ன?

தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்த மேற்கு வங்க தொழிலாளர் ஒருவர் சென்னை ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கிட்டதட்ட 15 நாட்களுக்குப் பின்னர், மருத்துவமனையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேலைத் தேடி சென்னை வந்துள்ளனர். ஆரம்பத்தில் பொன்னேரியில் வேலை செய்த இவர்களுக்கு, பின்னர் வேலை எதுவும் கிடைக்கவில்லை. சுத்தமாகப் பணமும் கையில் இல்லை. சமர்கான் இதனால் சாப்பிடுவதற்குப் பணம் இல்லாமல், திரும்ப … Read more

‘சென்னை விமானப் படை சாகச நிகழ்வால் மாணவர்கள் ஊக்கம் பெறுவர்’- குரூப் கேப்டன் பரமன் நம்பிக்கை

தாம்பரம்: 92வது இந்திய விமான படையின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள வான்சாகச நிகழ்ச்சி குறித்து தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தின் குரூப் கேப்டன் பரமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “92வது இந்திய விமான படையின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோலாகலமான அளவில் சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி மிகப்பெரிய வான்சாகச … Read more

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு ஆய்வை நிறுத்தி வைத்தது ஆந்திர அரசு

ஹைதராபாத்: திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது குறித்த சிறப்பு விசாரணைக் குழுவின் ஆய்வை ஆந்திர அரசு நிறுத்தி வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த விசாரணைக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உறுதியான ஆதாரம் இல்லாமல், லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக பொது வெளியில் சொன்னதற்காக ஆந்திர அரசை உச்ச நீதிமன்றம் சாடிய நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதுகுறித்து, ஆந்திராவின் உயர் போஸீஸ் அதிகாரி திவாரகா திருமலா ராவ் கூறுகையில், “எங்களின் விசாரணையின் நம்பத்தன்மையை … Read more

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்…? கம்பீர் போடும் தனி கணக்கு – முழு பின்னணி இதோ

Ruturaj Gaikwad, India National Cricket Team: வங்கதேசம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்தியாவில் விளையாட உள்ளது. இன்றோடு டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிட்டது. இந்திய அணி சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்திலும், கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வைட் வாஷ் செய்து வங்கதேசத்தை வதம் செய்துள்ளது.  அடுத்த டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் … Read more

அக்டோபர் 8ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் 8ந்தேதி  காலை 11 மணிக்கு   முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை  கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த செப்.28-ம் தேதி  அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.  அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும், . இவருக்கு அமைச்சரவையில், துரைமுருகனுக்கு அடுத்ததாக 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து … Read more

பாஜக தான் டார்கெட்.. திருப்பதி லட்டை வைத்து சந்திரபாபு போடும் பிளான்.. பகீர் கிளப்பும் சுகி சிவம்

சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டியை டார்க்கெட் செய்யவில்லை. சந்திரபாபு நாயுடு பாஜகவை தான் டார்க்கெட் செய்துள்ளார் என்று பேச்சாளர் சுகி சுவம் பரபரப்பை கிளப்பி உள்ளார். மேலும் அவர் தனது கருத்துக்கான விளக்கத்தையும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். திருப்பதி லட்டு விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த லட்டுவில் Source Link

Nakkhul : நகுல் பரபரப்பு புகார்.. யூடியூபில் வெளியான வீடியோ.. மன உளைச்சலில் நடிகர்!

சென்னை: நடிகர் நகுல் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான படம் வாஸ்கோடகாமா. இந்த, படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.எம். சந்துரு, நகுல் பற்றி மோசமான கருத்துக்களை கூறியிருந்தார். தன்னை பற்றி அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில்