பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

பாட்னா, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், பீகார் எல்லை அருகே உள்ள தடுப்பணையில் இருந்து லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், பீகார் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ஹெலிகாப்டரில் சென்று நேரில் ஆய்வு செய்தார். … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான தொடர்: வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது என்ன..?

கான்பூர். இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.இந்நிலையில்,வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பயிற்சியாளரின் கீழ் விளையாடி வருகிறோம். ராகுல் டிராவிட் எங்களது அணியின் பயிற்சியாளராக இருந்து சிறப்பான நேரத்தை … Read more

தாய்லாந்து: கல்வி சுற்றுலா சென்றபோது தீப்பிடித்து எரிந்த பஸ்; 25 மாணவர்கள் பலி என அச்சம்

பாங்காக், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே உத்தை தனி மாகாணத்தில் உள்ள பள்ளியில் இருந்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 44 பேர் இருந்துள்ளனர். கல்வி சுற்றுலாவுக்காக அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். எனினும், அவர்கள் சென்று சேர வேண்டிய இடம் என்னவென தெரியவில்லை. இந்த சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் 6 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அந்த பஸ், கு கோட் நகரில் ஜீர் … Read more

பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு பெறப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து இன்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட்டன. இதன்போது 19 வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, அவற்றில் 15 வாகனங்கள், முன் அறிவித்தலுக்கமைய வருகை தந்திருந்த குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 வாகனங்ளும், நிதி அமைச்சின் … Read more

Rain Alert: அடுத்த 5 நாள்களுக்கு அதிக கனமழை; பருவ மழையும் அதிகம் இருக்கும்; வானிலை மையம் சொல்வதென்ன?

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் 5ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வட தமிழகத்தில் இயல்பைவிட அதிக கனமழையும், தென் தமிழகத்தில் இயல்பான மழைப்பொழிவும் இருக்கும் என்றும் … Read more

“நாதக-வில் சேரும்போது செல்வந்தர்கள்… இன்று நாங்கள் தினக்கூலிகள்!” – கிருஷ்ணகிரி நிர்வாகி வேதனை

கிருஷ்ணகிரி: “நாம் தமிழர் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகள் ஆகிவிட்டோம்” என அக்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகிரியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நான் உட்பட ஊத்தங்கரை தொகுதிச் செயலாளர் ஈழமுரசு, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன், கிருஷ்ணகிரி தொகுதி தலைவர் திருமூர்த்தி, பர்கூர் தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான், கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்டச் செயலாளர் … Read more

“தேசப்பற்றை அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது’’ – ஹரியானாவில் பிரதமர் மோடி பிரச்சாரம்

பல்வால் (ஹரியானா): நமது நாட்டில் இருந்து தேசப்பற்றை அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்றும், நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வு வலுப்பெற்றால், தங்களால் வெற்றி பெற முடியாது என்று அக்கட்சி கருதுகிறது என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்ய ஹரியானா மக்கள் மீண்டும் … Read more

இலங்கை முன்னாள் அதிபர்களின் சலுகைகளை குறைக்க புதிய அதிபர் திசாநாயக்க நடவடிக்கை

இலங்கை: இலங்கையின் முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளை குறைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் கட்சி (ஜேவிபி)யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். அநுர குமார திசாநாயக்க தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முந்தைய இலங்கை அரசாங்கங்களில் புரையோடியிருந்த ஊழல், வீண் விரயம், மோசடி முறைகேடுகளுக்கு எதிராகவும், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், … Read more

Meiyazhagan: "தாத்தா வர்றாரு பாடலைவிட பச்சைக்கிளிகள் தோளோடு பாடல்தான்…" – கார்த்திக் நேத்தா பளீச்

பிரேம் குமார் – கார்த்திக் நேத்தா – கோவிந்த வசந்தா என்ற காம்போ மீது மக்களுக்கு அதீதமான நம்பிக்கை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். இதற்கு முன் `96′ படத்தின் ஆல்பத்தின் ‘லைஃப் ஆஃப் ராம்’ என்ற பாடல் மூலம், பயணிக்க துடிக்கும் ஒவ்வொருவனுக்கும் ஆழமான மனவோட்டத்தை அழகாக வரிகளிலேயே காட்சிப்படுத்தியிருந்தார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. ‘காதலே காதலே தனிப்பெருந்துணையே’ என மனதைக் கலங்கவும் வைத்திருந்தார். தற்போது ‘டெல்டா கல்யாணம்’ என்ற கொண்டாடப்பட்ட பாடலையும், `அருள் மெய்’, `ஊர் … Read more

திருப்பதி குடை யானைக் கவுனியைத் தாண்டும் நிகழ்ச்சி… சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

வட சென்னையின் பிரதானமான விழாவாகக் கருதப்படும் திருப்பதி குடை கவுனி தாண்டும் நிகழ்ச்சி நாளை (அக். 2) நடைபெறுகிறது. அதன் காரணமாக காலை 8 மணி முதல், என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அருகிலுள்ள தெருக்களில் ஊர்வலம் வால் டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை போக்குவரத்து நிறுத்தப்படும். . மதியம் 3 மணி முதல் வால் டேக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகள், யானை கவுனி பாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் … Read more